சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நலத்திட்டவர் உதவி வழங்கும் நிகழ்ச்சியில், சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தலை வெட்டி முனியப்பன் கோவில் தொடர்பாக சென்னை உயர் நதிமன்ற தீர்ப்பு குறித்த கோரிக்கை மனுவினை வழங்கினார்.
சேலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரிகள் பலரும் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மற்றும் சீர் மரபினரை சார்ந்த பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி சேலம் கோட்டை மைதானம் அருகே உள்ள தலை வெட்டி முனியப்பன் கோவிலில் இருப்பது புத்தர் சிலை தான் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பு சம்பந்தமாக கோரிக்கை மனு ஒன்றினை வழங்கினார்.
அந்த மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் சேலம் கோட்டை பகுதியில் உள்ள புத்தர் சிலை குறித்து முக்கியமான தீர்ப்பினை அளித்துள்ளது. மேற்கண்ட சிற்பம் புத்தரின் சிலை தான் என்றும் தலை வெட்டி முனியப்பன் கோவில் அல்ல என்று தவறாக புரிந்து கொல்லப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பளித்துள்ளது. மேற்கண்ட புத்தர் சிலை சம்பந்தமாக அதன் முந்தைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் சிலையில் உள்ள நிலப்பரப்பில் இது புத்தர் சிலை தான் என்றும் ஒரு போர்டு வைக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வந்து பார்வையிடலாம் என்றும் அறிவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
மேற்கண்ட தீர்ப்பினை மதிக்காமல் இந்து அறநிலையத்துறையினர் கூலிக்கு ஆட்களை வைத்து புத்தர் சிலைக்கு மஞ்சள் பூசியும் குங்குமம் வைத்தும் பூமாலை அணிவித்தும் இந்து முறைப்படி சடங்கு செய்தும் புத்தர் சிலையை இழிவு செய்து வருகின்றனர். எனவே இது நீதிமன்றத்திற்கு எதிரான செயல். மேலும் இந்து தலை விட்டு முனியப்பன் கோவில் என்ற பெயர் பலகையை நீக்கி புத்த விகார் என்ற பெயர் பலகையை நிறுவிட முன்வர வேண்டும். புத்த மதத்திற்கு தியானம் செய்திட வழிவகை செய்திட வேண்டும். மேலும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை பள்ளி ஆவணங்களில் இந்து கிறிஸ்துவர் முஸ்லிம் என்ற அடையாளங்கள் நிறுவப்பட்டுள்ளன அதனைத் தொடர்ந்து புத்த மதத்தினையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக் கொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த விழாவில் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரிகள் உட்பட பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: