சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் ஆமை வேகத்தில் கூட நடைபெறாது அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள். விரைந்து முடிக்கவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் குடிசை மாற்று வாரிய அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அம்பேத்கர் மக்கள் இயக்கம் கடும் எச்சரிக்கை....
சேலம் மாநகராட்சியின் 45 வது கோட்டத்திற்கு உட்பட்டது குகை நேரு நகர் மற்றும் காந்தி நகர். கடந்த 1972 ஆம் ஆண்டு கட்டப்பட்ட குடியிருப்புகள் பழுதடைந்த காரணத்தினால் குடியிருப்புகளை சரி செய்து தருமாறு குடியிருப்பு வாசிகள் மாவட்ட ஆட்சியர் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதனை ஏற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட குடியிருப்புகளை காலி செய்து தருமாறும், புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு 18 மாதங்களில் மீண்டும் அதே இடத்தில் அதே இடத்தில் மீண்டும் குடி அமர்த்த அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை எடுத்துக் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியிருப்புகளை காலி செய்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் வீட்டு மனைகளை குடியிருப்பு வாசிகள் ஒப்படைத்தனர். குடியிருப்புகளை காலி செய்து கொடுத்தும் 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை வேலை நிறைவு பெறாமல் ஆமை வேகத்தில் கூட நடைபெறாமல் இருக்கிறது என்பது சம்பந்தப்பட்ட குடியிருப்பு வாசிகளின் குற்றச்சாட்டாகவே உள்ளது. இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருந்த அனைத்து ஏழைகள் அதிலும் பெரும்பாலும் அருந்ததியர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் சேலம் மாநகரில் சாலை ஓரங்களில் செருப்பு விற்கும் தொழில் செய்பவர்கள் மேலும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவரும் இந்த குடியிருப்புகளில் வசித்து வந்த பொதுமக்களுடன் இணைந்து அம்பேத்கர் மக்கள் இயக்கம் மற்றும் ஆதித்தமிழர் பேரவை உட்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.டி.ஆர். சந்திரன், அருந்ததியர் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பிரதாபன், தமிழ்நாடு தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி மாநில தலைவர் பூ மொழி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் சசிகுமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆமை வேகத்தில் கூட நடைபெறாமல் இருக்கும் நேரு நகர் மற்றும் காந்திநகர் அடுக்குமாடி குடியிருப்புகளை விரைந்து கட்டி முடித்து ஏற்கனவே குடியிருந்த அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என் மனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் இனியும் காலம் தாழ்த்தாமல் அடுக்குமாடி குடியிருப்புகளை விரைந்து கட்டி முடிக்க தவறும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்று அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் குடியிருப்பு வாசிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: