சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சேலம் அருகே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பயன்படுத்தி வரும் சுடுகாட்டு நிலத்தை தொடர்ந்து அபகரித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள். உயர் ஜாதியினருக்கு பஞ்சாயத்து நிர்வாகம் துணை போவதாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் குற்றச்சாட்டு.
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நெய்க்காரப்பட்டி கிராமம். இங்குள்ள பெரியார் நகர் பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி நெருக்கென உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கும், தகனமூக்குவதற்கும் என அந்த பகுதியில் 5.50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாக தமிழக அரசின் வரைபடங்கள் தற்பொழுதும் தெரிவிக்கிறது.
இதனிடையே அதே பகுதியை சேர்ந்த மாற்று சமுதாயத்தைச் சார்ந்து ராமு செல்வம் மற்றும் ராஜு உள்ளிட்டோர் மயானத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட மொத்த நிலத்தில் சுமார் 2.50 ஏக்கர் நிலத்தை ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர் பெரியார் நகரை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் 50 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததோடு அதனை போலி பட்டாவையும் தயார் செய்து மேற்படி அந்த இடத்தை அளப்பதற்காக இன்று நில அளவையர்கள் உட்பட வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு காவல்துறை பாதுகாப்புடன் வந்து சுடுகாட்டு நிலத்தை அளந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து பெரிய புத்தூர் பெரியார் நகரை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரசுராம் ரவி அறிவுறுத்தலின் பேரில், எதிர்ப்பு தெரிவித்ததோடு அதிகாரிகளின் பணியை தடுத்ததாகவும் கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின் பேரில் இங்கு இந்த பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தாழ்த்தப்பட்டவர்களிடம் தெரிவித்துவிட்டு அந்த நீதிமன்ற உத்தரவையும் அவர்களிடம் காட்டாமல் திரும்பச் சென்றுள்ளனர். ஏற்கனவே 2 அரை ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரை வார்த்து கொடுத்த பஞ்சாயத்து நிர்வாகம் மீதமுள்ள நிலத்தையும் அவர்களுக்கு வழங்க முழு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்களில் மாயவன் என்பவர் கூறுகையில் பெரியார் நகர் மக்களுக்கு என அப்பொழுதே ஐந்தரை ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வரைபடங்கள் அனைத்தும் உள்ள நிலையில் ஏற்கனவே இரண்டரை ஏக்கர் நிலம் உயர் ஜாதினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது என்றும் இது குறித்து கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பல கட்ட போராட்டங்கள் மேற்கொண்டு வருவதாகவும் இது சம்பந்தமாக வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நெய்க்காரப்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியரிடம் புகார் மனு குறித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகும் இதுபோன்ற அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது ஒரு புறம் இருக்க சம்பந்தப்பட்ட நெய்க்காரப்பட்டி ஊராட்சி மன்ற கிளர்க்கு சுந்தரம் இது போன்ற உயர் ஜாதியினருக்கு துணையாக இருப்பது வேதனை கூறியது என்று குற்றச்சாட்டையும் முன் வைத்தார். கோரிக்கை விடுத்தார். அதுமட்டுமல்லாமல் இந்த சுடுகாட்டிற்கு என ஒதுக்கப்பட்ட நிலத்தில் இரண்டு கோவில்கள் உள்ள காரணத்தினால் இன்னும் முழுமையாக உயர் ஜாதியினரால் ஆக்கிரமிப்பு செய்ய முடியவில்லை என்றும் அந்த கோவில் இருக்கும் காரணத்திற்காக அதனை கை வைக்காமல் உள்ளனர் என்று குற்றம் சாட்டியதோடு மட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய தீர்வு ஏற்படுத்தி சுடுகாட்டிற்கு என்று ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்க தவறும் பட்சத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதோடு இந்த பகுதியை சார்ந்த அனைவரும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு என ஒதுக்கப்பட்ட நிலத்தை உயர் ஜாதினர் தொடர்ந்து அரசு துறை அதிகாரிகள் அரசியல் பின்புலம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரங்களை பயன்படுத்தி தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்படுமேயானால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை சார்ந்தவர்களை எதிர்வரும் காலங்களில் எங்கு கொண்டு அடக்கம் செய்வது எங்கு தகனம் ஊட்டுவது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்பது தற்போது பாதிக்கப்பட்டுள்ள அந்த பெரியார் நகர் பகுதி வாசி பொதுமக்களின் ஒட்டுமொத்த வேதனையாகவே உள்ளது.
0 coment rios: