பலூன் டெக்கரேசன் தொழிலை, தமிழ்நாடு அரசு சிறுதொழிலாக அங்கீகரிக்க வேண்டும்: தமிழ்நாடு பலூன் டெக்கரேசன் சங்கம் கோரிக்கை.
தமிழ்நாடு பலூன் டெக்கரேட்டர் சங்க அறிமுக விழா ஈரோட்டில் நடைபெற்றது. தமிழ்நாடு பலூன் டெக்கரேட்டர் சங்க அறிமுக விழாவில், தமிழ்நாடு தலைவர் மணிகண்டன் பலூன் டெகரேட்டர்களுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஈரோடு மாவட்ட செயலாளர் அப்துல் கூறுகையில், எங்கள் தொழிலை சிறுதொழிலாக அங்கீகரிக்க வேண்டும். கடன் வசதி மற்றும் மானியம் உள்ளிட்டவற்றை அரசிடம் எதிர்பார்க்கிறோம்.
தனியாக நலவாரியம் உருவாக்க வேண்டும். காப்பீடு, ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில தலைவர் மணிகண்டன், திருப்பூர், கரூர், சேலம், கோயம்புத்தூர் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்ட தலைவராக செல்வம், செயலாளராக அப்துல், பொருளாளராக ரமேஷ், துணை தலைவர் M.முகமது யாசின், தேர்வு செய்யப்பட்டனர்.
0 coment rios: