ஈரோடு மாநகராட்சி சாதாரண கூட்டத் தொடர் இன்று காலை மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் செல்வராஜ், துணை ஆணையாளர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு அ.தி.மு.க எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து தலைமையில் கவுன்சிலர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களது வார்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேச தொடங்கினர்.
இதனையடுத்து, அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து பேசும்போது,
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது திமுக கவுன்சிலர்கள் சிலர் பொள்ளாச்சி சம்பவம், தர்மபுரி சம்பவம் உங்களுக்கு நினைவில்லையா என்று கூறினார். தொடர்பாக காரசார வாக்குவாதம் நடந்தது. இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து பேசியனர்.
0 coment rios: