சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகி உள்ள மதகஜராஜா திரைப்படம் தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு 12 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது போல் உள்ளது. திரைப்படத்தை வரவேற்று விஷால் ரசிகர்கள் பெருமிதம்.
ஏ.சி.எஸ் அருண்குமார் தயாரிப்பில், விஜய் ஆண்டனி இசையமைப்பில் மற்றும் சுந்தர்.சி இயக்கத்தில் உருவான மதகஜராஜா விஷால் நடித்த திரைப்படம் பல்வேறு காரணங்களுக்காக 12 ஆண்டுகளாக திரைக்கு வராமல் இருந்தது. இதனிடையே நடிகர் விஷால் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் நடக்க முடியாமலும் நிற்க முடியாமலும் கைகள் அனைத்தும் நடுங்கிய நிலையில் அவர் அரங்கில் இருந்தது அவருடைய ரசிகர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருந்தது. நடிகர் விஷால் பூரண குணமடைந்து தற்பொழுது உடல்நலம் தேறியுள்ள நிலையில், இன்று தமிழக முழுவதும் அனைத்து திரையரங்குகளில் மதகஜராஜா திரைப்படம் வெளியானது.
சுமார் 12 வருடங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் திரையிடப்படாமல் இருந்த நடிகர் விஷால் நடித்த இந்த மதகஜராஜா திரைப்படம், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் விஷால் பூரண குணமடைந்த நிலையில், இன்று வெளியாகி உள்ளது அவர்களது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பினையும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே நடிகர் விஷால் பூரண உடல் நலம் பெற்று குணமடைய வேண்டும் என்று சேலத்தில் உள்ள நடிகர் விஷால் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் பல்வேறு பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் அவர் பூரண உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக நேற்று சேலம் சுவாமிநாதபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்ட பிறகு சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு நடிகர் விஷால் நலச்சங்கத்தின் தலைவர் துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் அன்னதானம் வழங்கினர். இதனை அடுத்து சேலம் மாநகரில் உள்ள முக்கிய திரையரங்குகளில் நடிகர் விஷாலின் திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள கௌரி திரையரங்கில் வெளியான திரைப்படத்தை வரவேற்கும் விதமாக நடிகர் விஷால் மக்கள் நல இயக்க தலைவர் சாமிதுரை தலைமையிலான நிர்வாகிகள் பாலகுமார் சூர்யா விஷால் மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட அவரது ரசிகர்கள் திரைப்படத்தை வரவேற்று உற்சாகமடைந்தனர்.
12 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டு தற்போது வரை திரையிடப்படாமல் இன்று வெளியாகி உள்ள இந்த மதகஜராஜா திரைப்படம் தற்பொழுது எடுத்ததைப் போல் உள்ளது என்றும் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு 12 ஆண்டுகளுக்கு முன்பே இந்த திரைப்படம் தயாராகியுள்ளது என்று தெரிவித்தார் விஷால் மக்கள் நல இயக்க தலைவர் சாமிதுரை.
0 coment rios: