செவ்வாய், 7 ஜனவரி, 2025

சேலத்திற்கு அருகே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பனமரத்துப்பட்டி ஏரியில் சீமாகருவேல மரங்கள் முளைத்து அடர்ந்த முட்புதராக காணப்படும் அவலம்.......2700 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை சீரழித்து கொண்டிருக்கும் கருவேல செடிகளை வேருடன் அளித்து நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பனமரத்துப்பட்டி ஏரியை மிகச்சிறந்த சுற்றுலா தளமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.......தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்திற்கு அருகே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பனமரத்துப்பட்டி ஏரியில் சீமாகருவேல மரங்கள் முளைத்து அடர்ந்த முட்புதராக காணப்படும் அவலம்.......2700 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை சீரழித்து கொண்டிருக்கும் கருவேல செடிகளை வேருடன் அளித்து நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பனமரத்துப்பட்டி ஏரியை மிகச்சிறந்த சுற்றுலா தளமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.......தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு....

மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்பாக சேலம் மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கடந்த 1911ம் ஆண்டு ஜருகுமலை அடிவாரத்தில், 2,700 ஏக்கர் பரப்பளவில் பனமரத்துப்பட்டி ஏரியை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். ஏரி உருவாக்கப்பட்டு, நடப்பாண்டுடன் 114 ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஏரியில் இருந்து நிரம்பி வழியும் நீரை, விவசாயிகள் தங்கள் பாசனத் தேவைகளுக்கும் குடிநீர் தேவைக்கும் உபயோகப்படுத்தி வந்தனர். இதனால் இந்த ஏரியை இயற்கையின் பெருங்கொடையாக விவசாயிகள் கொண்டாடினர். பனைமரத்துப்பட்டி ஏரி, அப்பெயரிலேயே அமையப்பெற்றுள்ள கிராமத்தில், இயற்கையாக அமைந்துள்ள ஒரு ஏரியாகும். சேலம் புறநகரில் உள்ள இந்த கிராமம், சேலம் நகரின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படும் நீராதாரமாக இருந்தது. மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன்பு, இந்த ஏரி தான் சேலம் மக்களின் குடிநீர் தேவைகளுக்கு ஆதரமாக இருந்திருக்கின்றது. இந்த ஏரி அதன் அழகான இயற்கை காட்சிகளுக்கு மிகவும் புகழ்பெற்றது என்பதால் இங்கு பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டது.
இதனிடையே .பனமரத்துப்பட்டி ஏரியில் பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட சுற்றுலா தலம் அமைக்க வேண்டும் என, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஏரியை புனரமைத்து, பொழுபோக்கு அம்சங்கள் நிறைந்த சுற்றுலா தலம் அமைக்க, சேலம் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. மேலும் சேலம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு நகர்புற அடிப்படை அபிவிருத்தி நிதியகம் இணைந்து, டெல்லியில் இயங்கும் டி.எச்.ஐ., என்ற தனியார் நிறுவனத்திடம், சுற்றுலா தலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியை ஒப்படைத்தது. கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் முதல், பனமரத்துப்பட்டி ஏரி பகுதியில் தனியார் நிறுவன பொறியாளர்கள் ஒன்றரை ஆண்டாக ஆய்வு பணி மேற்கொண்டு, 25கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுலா தலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்து வழங்கினர். 
ஆனால் சேலம் மாநகராட்சி நிர்வாகம் இதுவரை செயல் படுத்தவில்லை என்பது பனமரத்துப்பட்டி பஞ்சாயத்து நிர்வாகத்தினர், அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான இந்த ஏரிக்கு கடந்த 2006ம் ஆண்டு வரை நீர்வரத்து இருந்தது. அதன்பிறகு இந்த ஏரிக்கான நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு, போதிய மழையின்மை, பராமரிப்பு இன்மை உள்ளிட்ட காரணங்களினால் நீர் வரத்து என்பது முற்றிலுமாக நின்றுவிட்டது. இதன் காரணமாக கருவேல மரங்கள் முளைத்து ஏரி முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த ஏரியை பராமரிக்காமல் அழிவின் விளிம்பில் உள்ள பனமரத்துப்பட்டி ஏரியில் விளைந்துள்ள சீமை கருவேல மரங்களால் நிலத்தடி நீர் முற்றிலுமாக பாதித்து, அடர்ந்த காடு போல இருக்கும் இந்த ஏரிக்குள்ளே இருக்கும் சீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற அந்த பகுதி விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று சேலம் மாநகராட்சி நிர்வாகம் சீமைகருவேல மரங்களை அகற்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட்டது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், 
அதனடிப்படையில் கடந்த ஆண்டு துவங்கிய இந்த பணி, பல்வேறு காரணங்களுக்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அந்தபகுதியை சேந்த விவசாயிகளிடம் கேட்டபோது, தங்களது கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட இந்த பணி தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், பணி நிறுத்தப்பட்ட பிறகு மீண்டும் சீமை கருவேல மரங்கள் முளைத்து அடர்ந்த காடு போல காட்சியளிப்பதாக குற்றம் சுமத்திய அந்தபகுதி விவசாயிகள், சீமைகருவேல மரங்களை வேருடன் அகற்றி, ஏரியை உடனடியாக தூர்வாரி நீர் வரத்திர்க்குண்டான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கோபாலகிருஷ்ணன்.
இது ஒரு புறம் இருக்க, மேலும் அவர் கூறுகையில் ஏற்கனவே  இதுகுறித்து பனமரத்துப்பட்டி ஏரி பாசனம் அடிப்படையில் சேலம் முனிசிபல் கவுன்சிலுக்கு வழங்கப்பட்டதாகவும் சேலம் மாநகராட்சி நிர்வாகம் தற்போது பராதின விதியை மீறிவிட்டதால் ஏரியை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் சேலம் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ள வில்லை என்று குற்றம் சாட்டியதுடன், அழியும் நிலையில் ஏரியில் வளர்ந்து பனமரத்துப்பட்டி கிராமத்தின் அனைத்து பகுதிகளிலும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை சீரளித்துக்கொண்டிருக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றி பனமரத்துப்பட்டி ஏரியை சுற்றுலா தளமாக மாற்ற தனியார் நிறுவனம் அளித்த ஆய்வறிக்கையை செயல்படுத்த சேலம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியை தங்களது வசம் ஒப்படைக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக பனமரத்துப்பட்டி பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்தார் விவசாயி கோபாலகிருஷ்ணன். 
சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான இந்த ஏரிக்கு கடந்த 2006ம் ஆண்டு வரை நீர்வரத்து இருந்தது. அதன்பிறகு இந்த ஏரிக்கான நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு, போதிய மழையின்மை, பராமரிப்பு இன்மை உள்ளிட்ட காரணங்களினால் நீர் வரத்து என்பது முற்றிலுமாக நின்றுவிட்டது. இதன் காரணமாக கருவேலம் மரங்கள் முளைத்து ஏரி முழுவதும் ஆக்கிரமித்து விட்டது. இதன் காரணமாக இந்த பகுதியில் விவசாயம் என்பது முற்றிலுமாக பாதித்துள்ளதாகவும், பணப்பயிர்கள் பயிரிடப்பட்டுவந்த இந்த பகுதில் தற்போது மானாவாரி பயிர்கள் மட்டுமே பயிரிடும் நிலைக்கு இங்குள்ள விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாக  வேதனை படுகின்றனர் இந்த பகுதி விவசாயிகள்.
அடர்ந்த காடு போல இருக்கும் இந்த ஏரிக்குள்ளே காட்டுப்பன்றி, மற்றும் நரி உள்ளிட்ட வன விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவ்வப்போது ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளுக்குள் புகும் விலங்குகளால் பயிர்ச்சேதம் கால்நடைகளுக்கு உயிர்ச்சேதம் ஏற்படுவதாகவும், வீடுகள், அலுவலக கட்டிடங்களில் இருந்து மழைநீர் சேகரிக்க வேண்டும் என்ற திட்டத்தை கட்டாய படுத்திய தமிழக அரசு, சிறிய இடமாக இருந்தாலும் இந்த திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என்று கூறிய தமிழக அரசு, 2700 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை சீரழித்து கொண்டிருக்கும் கருவேல செடிகளை அளித்து நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பனமரத்துப்பட்டி ஏரியை மிகச்சிறந்த சுற்றுலா தளமாக மாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். சிதலமடைந்து கொண்டிருக்கும் நீராதாரம், போதுமான பராமரிப்பின்மை, அடர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி நிறுத்தம் உள்ளிட்ட காரணங்களினால்  பனமரத்துப்பட்டி ஏரியை மீட்டெடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து எழில் கொஞ்சும் ஏரியாக மீட்டெடுக்க வேண்டும் என்பது மட்டுமே சேலம் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பாக பனமரத்துப்பட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வழக்கறிஞர் ராஜேந்திரன். அவர் மாவட்ட செயலாளர் சுற்றுலாத்துறை அமைச்சர் என்று பல்வேறு பெயர்களை பெற்று இருந்தாலுமே கூட அவருக்கு பணமரத்துப்பட்டி ராஜேந்திரன் என்ற ஒரு பெயரும் தற்பொழுது வரை யாருடைய மனதில் இருந்தும் நீங்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. 
பலகட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகும், தற்பொழுது வரை செவி சாய்க்காத தமிழக அரசு சேலத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்களை சுற்றுலாத்துறை அமைச்சராக நியமித்துள்ள தற்போதைய தமிழக அரசு விவசாயிகள் மற்றும் சேலம் மாவட்ட பொது மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: