அதன்படி, மொத்தம் 58 வேட்பாளர்கள் சார்பில் 65 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் மீது நேற்று முன்தினம் (ஜன.18) சனிக்கிழமை நடந்த பரிசீலனையின் முடிவில் 3 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுதாரர்களில் யாரேனும் திரும்பப் பெற விரும்பினால் இன்று (ஜன.20) திங்கட்கிழமை மாலை வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வாபஸ் பெறுவதற்கான இறுதி நாளாக இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், 8 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்ற நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 47 பேர் களத்தில் உள்ளனர். அதன்படி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 47 பேர் போட்டியிடுகின்றனர் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.மனிஷ்.என் அறிவித்துள்ளார்.
0 coment rios: