மனிதநேய மக்கள் கட்சி ஈரோடு கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சங்கு நகரில் மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் பி.சலீம் வரவேற்புரை ஆற்றினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆட்டோ சாகுல் அமீது இறைவசனம் ஓதி துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் சு.ராஜ்குமார் கலந்து கொண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்து நெகிழ்ச்சியுடன் வாழ்த்தி பேசினார்.
மமக மாநில தலைமை பிரதிநிதிகள் சுல்தான் அமீர் மற்றும் முஹம்மது ரிஸ்வான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதனைத் தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது அவர்கள் பாசிச பாஜக ஒன்றிய அரசின் அராஜக ஆட்சியை பற்றியும், முஸ்லிம்களின் இன்றைய அரசியல் நிலைப்பாடு பற்றியும் எழுச்சி உரையாற்றினார்.
மமக மாநில செயற்குழு உறுப்பினர் அமீர், மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் பௌஜூல் ஹஸன், கரூர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, மமக மாவட்ட துணை செயலாளர்கள் சாகுல் ஹமீது, தஸ்ருதீன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சாகுல் அமீது, இஸ்மாயில், தகவல் தொழில் நுட்ப அணி கோவை மண்டல செயலாளர் க.முஹம்மத் உமர் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த கழக போராளிகள் ஈரோடு கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், மாநில தலைமை பிரதிநிதியுமான சுல்தான் அமீர் முன்னிலையில் தங்களை மனிதநேய மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இறுதியாக மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை தலைவர் சுல்தான் அலாவுதீன் நன்றியுரை ஆற்றினார்.
இந்த சிறப்பு வாய்ந்த மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட துணை & அணி நிர்வாகிகள், கழகத்தின் தூண்களான அனைத்து கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
0 coment rios: