S.K. சுரேஷ்பாபு.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தீவிர விசுவாசத்தின் காரணமாக தன் கை விரல்களை துண்டித்துக் கொண்ட ஓய்வு பெற்ற தலைமை காவலர். எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் துரோகத்தால் அதிமுகவை விட்டு விலகி ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவாக கலைஞர் வேடமிட்டு தீவிர பிரச்சாரம்.
சேலம் மாவட்டம் காரிப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ரத்தினம். இவர் அதிமுக மீதும் அப்போதைய அதிமுகவின் பொதுச் செயலாளர் தமிழக முதலமைச்சர் ஆக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் மீதும் இருந்த தீவிர விசுவாசத்தின் காரணமாக, அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் ஜெயலலிதா அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தனது இடது கையில் மூன்று விரல்களை துண்டித்து, தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனை அறிந்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அவரை சென்னைக்கு உடனடியாக அழைத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்து அவரின் உயிரை காப்பாற்றி பொருளாதார உதவியும் செய்தார்.
இந்த நிலையில் அதிமுகவின் மிகுந்த விசுவாசியான சேலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை காவலர் ரத்தினம் பல்வேறு காரணங்களால் அதிமுகவில் இருந்து விலகி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து கடந்த மாதம் 27ஆம் தேதி, ஈரோடு மாநகராட்சி மன்ற உறுப்பினர் கணேசன் தலைமையில் பகுதி செயலாளர் அக்னி சந்துரு மற்றும் திமுக இலக்கிய அணி செயலாளர் சுமதி மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்களுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சூரம்பட்டி கருங்கல்பாளையம் மற்றும் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சேலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை காவலர் ரத்தினம் முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் அவர்களின் வேடமிட்டு வீதி வீதியாக நடந்தே சென்று திமுக கூட்டணி வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவாக வாக்குகளை வேட்டையாடினார். அப்போது திமுக ஆட்சியின் நல்ல பல திட்டங்கள் குறித்து தொகுதி மக்களிடையே எடுத்துரைத்தும் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமாரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் பிரச்சாரத்தின் போது கேட்டுக்கொண்டார்.
பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சேலம் திரும்பி அவர் நிம்மிடையே கூறுகையில், அதிமுகவின் மீதும் அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஆன செல்வி ஜெயலலிதா அவர்கள் அப்போது நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தலில் புதுவை உட்பட தமிழகம் முழுவதும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று தனது இடது கையில் உள்ள மூன்று விரல்களையும் அயோத்தியா பட்டணம் ராமர் கோவிலில் வெட்டி தான் நேர்த்திக்கடன் வைத்ததாகவும், இதனை அடுத்து புரட்சி தலைவி அவர்கள் தன்னை அழைத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவ செலவையும் ஏற்றுக் கொண்டதோடு தனது குடும்பத்திற்கான பொருளாதார உதவியும் செய்தார் என்று குறிப்பிட்ட அவர், அவரது மறைவுக்கு பிறகு அதிமுகவையே எடப்பாடி பழனிச்சாமி சீரழித்து விட்டதாக குற்றம் சாட்டிய ரத்தினம், அவரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு நானும் தனது குடும்பத்தாரும் சென்றபோது தங்களை உதாசீனப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பலரது முன்னிலையில் தங்களை அவரது வீட்டை விட்டு வெளியே துரத்தி அவமானப்படுத்தியதாக வேதனையுடன் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் அதிமுகவை சேர்ந்த இளங்கோவனை பக்கபலமாக வைத்துக்கொண்டு தேசிய கட்சியான அதிமுகவை தொடர்ந்து நாசப்படுத்தி வரும் அந்த அவமானம் தாங்க முடியாமல் அதிமுகவின் தீவிரவாசிவாசியாக இருந்த நான் தன்னை அதிமுகவிலிருந்து விளக்கிக் கொண்டு திமுகவில் இணைந்ததாகவும் தற்போது ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவாக வீதி வீதியாக நடந்தே சென்று கலைஞர் வேடமிட்டு வாக்குகளை சேகரித்ததாகவும் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் உட்பட எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார். நிறைவாக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தன்னை விரைந்து அழைத்து பேசுவார் என்றும் ஓய்வு பெற்ற தலைமை காவலர் ரத்தினம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
0 coment rios: