சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் பட்டியலின பெண்ணிற்கு RBI சட்ட விதிகளுக்கு எதிராக செயல்படும் எஸ் பி ஐ வங்கி மேலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் வங்கி முன்பு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு கடும் எச்சரிக்கை.
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாதன். இவரது மகள் கோமதி பிரியதர்ஷினி. இவர் சுய தொழில் செய்வதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருபதாம் தேதி தாட்கோ மூலம் 5 பகுதியில் உள்ள SBI வங்கியில் 4.29 லட்ச ரூபாய் மானிய கடன் பெற்று இருந்தார். 30% மானியம் அதாவது, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மானியத் தொகையை 5 ரோடு வங்கி கிளை வங்கி மேலாளர் திரும்ப வழங்காத நிலையில் தாட்கோ மூலம் பெறப்பட்ட கடன் தொகைக்கு மாதாந்திர தொகை சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் வசூலித்துள்ளது. கடந்த 6 வருடங்களாக பாதிக்கப்பட்ட கோமதி பிரியதர்ஷினி என்ற பட்டியலின பெண்ணிற்கு எதிராக சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் இந்த வங்கி நிர்வாகம் அசல் மற்றும் வட்டி சேர்த்து மாதம் தோறும் 11,500 வீதம் வசூல் செய்துள்ளனர். கடந்த கொரோனா காலகட்டத்தில் சரிவர செலுத்தாமல் இந்த மாதாந்திர தொகைக்கு பின்னிட்டு தேதிகளில் நிலுவையில் உள்ள பணம் அனைத்தும் பாதிக்கப்பட்ட பட்டியல் இனப்பெண் செலுத்தி விட்டதாக தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோமதி பிரியதர்ஷினி சம்பந்தப்பட்ட வங்கி கிளை மேலாளர் இடம் கேட்டபோது தான் எவ்வளவு கடன் தொகை பெற்றேன், இதுவரை எவ்வளவு செலுத்தி உள்ளேன் என்று கேட்ட போது, சம்பந்தப்பட்ட வங்கி கிளை மேலாளர், ஒரு பெண் என்றும் பாராமல் அவரை அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி பாதிக்கப்பட்ட பெண் கேட்ட விளக்கத்திற்கு பதில் அளிக்காமல் வங்கியில் இருந்து விரட்டி திரும்ப அனுப்பி உள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பட்டியலின பெண் மற்றும் அவரது தந்தை கோபிநாதன் ஆகியோர் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளரும், மத்திய மாநில அரசு எஸ்சி / எஸ்டி ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சரசுராம் ரவி அவர்களை அலுவலகத்தில் சந்தித்து முறையிட்டிருந்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட சரஸ்ராம் ரவி கோரிக்கை மனுவினை பரிசீலித்து விட்டு தாட்கோ மூலம் பெறப்பட்ட சுயதொழில் வங்கி கடன் தொகைக்கு உடனடியாக சப்சிடி எனப்படும் மானியம் அதாவது 30% அதாவது 1.50 லட்ச ரூபாய் உடனடியாக விடுவித்து இருக்க வேண்டும் ஆனால் கடந்த 6 வருடங்களாக சம்பந்தப்பட்ட வங்கி கிளை மேலாளர் விடுவிக்காமல் ஏமாற்றி வருவது, ரிசர்வ் வங்கி சட்ட கொள்கைக்கு எதிரானது என்று குற்றம் சாட்டிய அவர், இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர், சேலம் மாநகர காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சேலம் மண்டல மேலாளரிடம் புகார் மனு அளித்து சம்பந்தப்பட்ட ஐந்து ரோடு எஸ்.பி.ஐ வங்கி கிளை மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து நிலுவையில் உள்ள 1.50 லட்ச ரூபாயை விடுவிக்காமல் கடந்த 6 வருடத்திற்கான வட்டித் தொகையை சேர்த்து உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும், மத்திய மாநில எஸ்சி / எஸ்டி பிரிவு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான சரஸ்ராம் ரவி கேட்டுக் கொண்டதோடு மட்டுமல்லாமல், ஒரு பட்டியலின சமுதாயப் பெண்ணை கேவலப்படுத்தி அசிங்கப்படுத்தி அவமானப்படுத்திய குற்றத்திற்காக சம்மந்தப்பட்ட ஐந்து ரோடு எஸ்.பி.ஐ வங்கி கிளை மேலாளரை பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட எஸ்.பி.ஐ ஐந்து ரோடு கிளை அலுவலகத்தை முற்றுகையிட்டு மிகப் பெரிய அளவிலான போராட்டம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்கும் வரை நடத்தப்படும் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அப்போது அமைப்புகளின் நிர்வாகிகள் ராஜசேகர் கோபிநாதன் செல்வகுமார் பொன்னம்மாள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
0 coment rios: