ஈரோட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்: திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத் தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
மொத்தமுள்ள 33 வார்டுகளில் 2.26 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தொகுதியில் முஸ்லிம்கள், முதலியார்கள் பெரும்பான்மை வாக்காளர்கள். இதையடுத்து அருந்ததியர்கள் உள்ளனர். இங்கு நெசவாளர்களும், மஞ்சள் வர்த்தகம் செய்பவர்களும் அதிக அளவில் இருக்கின்றனர்.
இந்நிலையில், திமுக சார்பில் வி.சி சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் களம் காண்கின்றனர். இதில் குறிப்பாக திமுகவும் நாம் தமிழர் கட்சியும் இருமுனைப் போட்டியாக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது,
அதன்படி, தற்போது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வீசி சந்திரகுமார் இன்று காலை சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் நோட்டிஸ்களை கொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த வாக்கு சேகரிப்பின்போது ஈரோடு மாநகர துணை மேயர் செல்வராஜ், திமுக துணைச் செயலாளர் செல்லப்பொன்னி மனோகரன், உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக வேட்பாளர் வீசி சந்திரகுமார் கூறுகையில், ஈரோடு வளர்ச்சிக்காக பாடுபடுவேன், ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் கருத்தில் கொண்டு, ஈரோட்டில் இரு எல்லைகளானன கரூர் சாலையில் சோலாரில் புதிய பேருந்து நிலையமும், சத்தி சாலையில் புதிய பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு சிக்கிய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரி ஆக்க ஒன்றிய அரசின் அனுமதியை கேட்டு காத்துக் கொண்டிருக்கிறோம். ஈரோட்டில் ஒட்டுமொத்த போக்குவரத்து நெரிசலையும் குறைக்க ஈரோடு காவிரி ஆற்றுக்கும் காளிங்கராயன் வாய்க்காலுகக்கும் இடையே ஒரு நான்கு வழி சாலையை அமைக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தத் திட்டம் நிறைவேறினால் ஈரோடு மற்றும் ஈரோடு சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசல் முழுமையாக தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். ஈரோட்டில் ஜவுளி மற்றும் மஞ்சள் தொழில் சார்ந்த அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் அரசு எடுத்து வருகிறது. நான் சட்டமன்ற உறுப்பினரானவுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக அனைத்து பணிகளையும் மேற்கொள்வேன் என்றார்.
0 coment rios: