ஈரோடு மாநகராட்சி வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
2024- 2025-ம் நிதி ஆண்டில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குத்தகையினங்கள், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் மற்றும் இதர வரியினங்களை உடனடியாக செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்.
வரி வசூல் மையங்கள் சனிக் கிழமை உள்பட அனைத்து வேலை நாட்களிலும் (அரசு விடுமுறை நாட்கள் தவிர) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படுகிறது. எனவே, இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களது வரியினங்களை செலுத்த வேண்டும்.
அனைத்து வரி மற்றும் கட்டண தொகையை ரொக்கம், காசோலை மற்றும் வரைவோலை மூலமாக மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களிலும், tnnurbanepay.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் செலுத்தலாம்.
ஈரோடு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டண தொகையை தாமதமின்றி செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 coment rios: