S.K. சுரேஷ்பாபு.
சேலம் சங்ககிரியில் ஆறு இடங்களில் குடிநீர் தானியங்கி நிலையங்கள் திறப்பு விழா. நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமதி நர்மதா துவக்கி வைத்தார்.
CUMMINS, Pune, நிறுவனத்தின் CSR உதவியுடன் NIWAD TRUST மூலமாக அமைக்கப்பட்ட தானியங்கி குடிநீர் விநியோகிக்கும் மையம், சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுக்காவில் 6 இடங்களில் WATER ATM திறப்பு விழா நடைப்பெற்றது. இந்த நிகழ்வை மாவட்ட வளர்ச்சி மேலாளர் NABARD திருமதி.கே.கே.நர்மதா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திர மையத்தை துவங்கி வைத்தார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், செயலாளர்கள், Water User Group Members (SHG) 1. ஆவரங்கபாளையம் – கோட்டவரதன்பட்டி பஞ்சாயத்து, 2. ஊஞ்சானுர், 3. அஞ்செட்டிபட்டி – அன்னதானபட்டி பஞ்சாயத்து, 4. சத்யா நகர், 5. செட்டிக்காடு – தேவனகவுண்டனூர் பஞ்சாயத்து, 6. வீராச்சிபாளையம் ஆகிய ஆறு இடங்களில் “WATER ATM” சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்கள் CUMMINS, Pune, நிறுவனத்தின் CSR உதவியுடன் NIWAD TRUST மூலமாக கட்டப்பட்டு சமுதாயத்துக்கு அந்தந்த ஊராட்சி தலைவர்களின் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
தற்பொழுது முதல் பயன்பாட்டிற்காக வந்துள்ள, இதன் முக்கியதத்துவத்தை NIWAD நிர்வாக அறங்காவலர், திரு.S.கிருஷ்ணமூர்த்தி திருமதி.V. செல்வராணி ஆகியோர் மக்களுக்கு விளக்கினார். இத்திட்டம் சங்ககிரிக்கு உட்பட்ட ஏழு பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த உதவியாக இருந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், செயலாளர்கள் மற்றும் பொது மக்களுக்கும் நன்றி தெரிவித்து விழா நிறைவு பெற்றது.
0 coment rios: