மத்திய அரசின் மும்மொழி கல்விக் கொள்கையைக் கண்டித்து ஈரோட்டில் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மத்திய அரசின் மும்மொழி கல்விக் கொள்கையை எதிர்த்து தி.மு.க.வினர் தமிழக முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஈரோடு காந்திஜி ரோடு ஜவான் பவன் அருகில் தெற்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி, தமிழ்நாடு மாணவர் இயக்க கூட்டமைப்பு சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், மாநகர் திமுக செயலாளர் மு.சுப்பிரமணியம், ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வே.செல்வராஜ் , மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிசாமி, பகுதி செயலாளர்கள் அக்னி சந்துரு, பொ.இராமச்சந்திரன், தலைமை பேச்சாளர் இளையகோபால், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சரளைராசு, மாநகர மாணவரணி அமைப்பாளர் என்.ஸ்ரீதர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
0 coment rios: