தமிழகத்தில் பேருந்து வசதி இல்லாத குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தித் தர புதிய மினி பேருந்து திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 65 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டது.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 15ம் தேதி வரை பெறப்பட்டது. இதில் 39 வழித்தடங்களுக்கு 88 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 25 வழித்தடங்களுக்கு ஒரு விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டது. 14 வழித்தடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் குலுக்கல் நடத்தப்பட்டு 14 விண்ணப்பதார்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்கள் பேருந்துகளை தயாா் செய்யவும் மற்றும் இதர ஆவணங்களை சமா்ப்பிக்கவும் 39 விண்ணப்பதாரா்களுக்கு அடுத்தக் கட்ட பணிகள் மேற்கொள்ள செயல்முறை ஆணையினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.
இந்நிகழ்வில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ம.பதுவைநாதன் (ஈரோடு (மேற்கு), மு.மாதவன் (பெருந்துறை), கோ.மோகனப்பிரியா (கோபிசெட்டிபாளையம்) உட்பட கோட்ட மேலாளர், தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ஈரோடு மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: