ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நிலுவை மற்றும் நடப்பாண்டு வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் தொழில் உரிம கட்டணம் தற்போது வசூல் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து கிராம ஊராட்சி பொது மக்களும் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் தொழில் உரிம கட்டணம் செலுத்த வேண்டியது கட்டாயக் கடமையாகும்.
எனவே, அனைத்து கிராம ஊராட்சி பொது மக்களும் காலம் தாழ்த்தாமல் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயோ, வரி வசூல் முகாம்களிலோ, ஊராட்சி களப்பணியாளர்களிடமோ "POS MACHINE" மூலமாகவோ அல்லது வீட்டுவரி இணையதளம் https://vptax.tnrd.tn.gov.in என்கிற VP Tax Online Portal மூலமாகவோ UPI (PayTM, Gpay, Phonepe), பற்று அட்டை (Debit card) அல்லது கடன் அட்டை (Credit card) மூலம் வரி தொகை செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம்.
மேலும், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படி முறையாக வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கையும், தண்ணீர் வரி செலுத்தாதவர்களின் வீட்டுக் குடிநீர் இணைப்பு துண்டிக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
0 coment rios: