சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தனியார் மாணாக்கர்கள் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர். சேலம் மாவட்ட சமூக நல பாதுகாப்புத்துறை அதிகாரியை நேரில் சந்திப்பு.
தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன் பெறும் வகையில் தமிழக அரசு செம்மையாக நடத்தி வருகிறது. இது போன்ற விடுதிகளில் அவ்வப்போது உணவு சரியில்லை பராமரிப்பு சரியில்லை என்று குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணம் தான் உள்ளன. இந்த நிலையில் கோவையை தலைமை இடமாகக் கொண்டு தனியார் மாணாக்கர்கள் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் 350-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். கோவை ஈரோடு மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தனியார் தங்கும் விடுதிகள் இந்த அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகின்றது. கடந்த 9 ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டிருக்கும் கோவை ஹாஸ்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அனந்தராமன் தலைமையிலான நிர்வாகிகள் சேலம் மாவட்ட சமூக நல பாதுகாப்புத்துறை அதிகாரியை நேரில் சந்திப்பதற்காக வந்திருந்தனர்.
மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்கள் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், கோவையை தொடர்ந்து சேலம் மாவட்டத்திலும் தங்களது அமைப்பை விரிவு படுத்துவதற்காக தற்பொழுது சமூக பாதுகாப்பு நலத்துறை அதிகாரியை சந்தித்துள்ளதாகவும் தங்களது அமைப்பு ஜிஎஸ்டி வரிக்கு எதிராக போராடி அதில் வெற்றியும் பெற்றுள்ளதாகவும், அரசு விதிகளுக்கு உட்பட்டு கல்லூரி விடுதி மாணவ மாணவர்களின் பாதுகாப்பிற்காக இதுபோன்று தனியார் விடுதிகளை தாங்கள் செயல்படுத்தி வருவதாகவும் மாணவ மாணவிகள் போதை பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்கும் நோக்குடனும் தங்களது அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர்கள் விடுதி தொடர்பான உரிமம் பெறுவது தமிழக அரசு ஆன்லைன் மூலம் செயல்படுத்தி வருவதால் தங்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதாகவும் தமிழக அரசு இதனை எளிமைப்படுத்த உதவ வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் தங்களது அமைப்பு சேலத்தில் வாசவி தங்கும் விடுதி உரிமையாளர் உடன் இணைந்து தங்களது சங்கத்தை சேலத்தில் விரிவுபடுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
அப்போது சங்க நிர்வாகிகள் டாக்டர் தமிழ்மணி, அனுஷா பிரகாஷ், பாஸ்கர் மற்றும் ரூபிணி கூலி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 coment rios: