தமிழ்நாடு விசைத்தறிகளுக்கு ரக ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என திருச்சி எம்பி துரை வைகோவிடம் கோரிக்கை...
திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் எல் கே எம் சுரேஷ் தலைமையில், செயலாளர் இரா. வேலுச்சாமி, பொருளாளர் பாலசுப்ரமணியம், துணைத் தலைவர் மங்களம் கோபால், திருப்பூர் மண்டல பொறுப்பாளர் பாலாஜி, கோவை மாவட்ட பொறுப்பாளர் செல்வகுமார், பல்லடம் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் பொருளாளர் முத்துக்குமாரசாமி, கண்ணம்பாளையம் பொறுப்பாளர் செந்தில் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள்,
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோவை சந்தித்து விசைத்தறிகளுக்கு ரக ஒதுக்கீடு செய்து தரும்படி மத்திய அரசை வலியுறுத்த கோரி மனு வழங்கினர்,
இந்த கோரிக்கை மனு குறித்தும், விசைத்தறியாளர்களின் முழு கோரிக்கை விபரங்களை கேட்டறிந்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, விசைத்தறி உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கைகளை மத்திய அரசிடம் பேசி செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.
0 coment rios: