உயர்நீதி மன்ற உத்தரவிற்கு மாறாக கூம்பு வடிவ ஒலிபெருக்கியால் மக்கள் அவதி அடைந்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ..!
ஈரோடு கைகாட்டிவலசு பகுதியில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி சத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, கைகாட்டிவலசு அருகே அடுக்குப்பாறை பகுதியில் சின்னமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு குடமுழுக்கு நடைபெறுவதாக அனுமதியில்லாமல் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கி யை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்த காவல்துறையினர் எச்சரித்தும் அதிக சத்தத்துடன் ஒலி பெருக்கி இயங்குவதை நிறுத்தவில்லை. இதனால் வயதானவர்கள், பள்ளி இறுதி தேர்விற்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே உயர்நீதி மன்ற உத்தரவிற்கு மாறாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒலி பெருக்கியை அகற்றுமாறு திமுக பிரமுகர் சண்முகசுந்தரம் ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
0 coment rios: