சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக முதலமைச்சர் பிறந்த நாள் விழா மாபெரும் கிரிக்கெட் போட்டி. வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் ஊக்க தொகைகள் வழங்கி பாராட்டு.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி சேலம் கிழக்கு மாவட்டம் அயோத்தியாபட்டணம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் மாபெரும் கிரிக்கெட் திருவிழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்டம் அயோத்தியாபட்டணம் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில் விடுமுறை நாட்களில் மட்டும் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியில் சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட அணைகள் பங்கேற்றனர்.
நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டியில் காலிறுதி அரையிறுதி போட்டிகள் நடத்தப்பட்டு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு சுக்கம்பட்டி அணியும் மேட்டுப்பட்டி அணியும் தேர்வாகினர். பத்துபவர்களாக நடத்தப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டியினை சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் தொடங்கி வைத்தார். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சேலம் மாவட்ட அமைப்பாளர் ஃபிரண்ட்ஸ் ரமேஷ் முன்னிலை வகித்த இந்த தமிழக முதல்வர்களுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டியில், பங்கேற்ற அணி வீரர்கள் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தங்களது முழு திறமையை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல் பரிசாக பரிசு கோப்பையுடன் இருபத்தைந்தாயிரம் ரூபாய் ரொக்க பணமும், இரண்டாவது பரிசாக பரிசு கோப்பையுடன் 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும், மூன்றாவது பரிசாக பரிசு கோப்பையுடன் பத்தாயிரம் ரூபாய் ரொக்க படமும் இதேபோல நான்காவது பரிசாக பரிசு கோப்பையுடன் 6000 ரூபாயும் வழங்கி விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
அதுமட்டுமில்லாமல் 572க்கும் மேற்பட்ட நபர்களுக்கு டிபன் பாக்ஸும் வழங்கப்பட்டன என்பதும், பங்கேற்ற அணி வீரர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கும் மதிய விருந்தாக கருவிருந்தும் படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: