ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய அரசின் கொள்கையை அனைத்து மாநில அரசுகளும் ஏற்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்வது சர்வாமுத்தரசன் திகாரத்தின் உச்சமாகும். வகுப்புவாத கொள்கையை மத்திய அரசு பின்பற்றுகிறது.
தேசிய கல்விக்கொள்கையால் தமிழக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். தமிழகத் தில் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி நடைமுறையில் உள்ளது. ஆனால், தேசிய கல்விக்கொள்கையில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தால் மட்டுமே, 4-ம் வகுப்புக்கு செல்ல முடியும்.
இதேபோல் 5. 8. 10, 12 ஆகிய வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. எந்தெந்த மாநிலங் களில் தேசிய கல்விக்கொள்கை பின்பற்றப்படுகிறது? என்று மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்தி மொழி பேசும் மாநிலங்களில் வேறு மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறதா? என் பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், தமிழக எம்.பி.க்களை நாகரிகம் இல்லாதவர்கள் என்று பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. அவர்களை தவறாக பேசிய மத்திய மந்திரி உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
ஈரோட்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க பணி செயல்பட்டு வரும் நிலையில் போதுமான மாணவர்கள் இல்லாத நிலையில் மூடும் நிலையில் உள்ளது. தமிழக அரசு அந்த நடவடிக்கைகள் கைவிட வேண்டும்.
அமலாக்கத்துறை பா.ஜ.க.வின் ஒரு பிரிவாக உள்ளது இந்த துறை மீது உச்சநீதிமன்றம் பலமுறை நடவடிக்கைகளை கண்டித்து இருக்கிறது குறிப்பாக தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு மேற்கொள்ளும் யுத்தம் மேற்கொண்டு வரும் நிலையில் இதுவும் அதில் ஒன்று தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 coment rios: