1993ல் பணியில் சேர்ந்து பதவி உயர்வு பட்டியலில் காத்திருக்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு உடனடியாகப் பதவி உயர்வு வழங்க வேண்டும். கர்ப்பணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதம் முதல் 25 மாதம் வரை இணை உணவை வாங்கக் கூடிய பயனாளிகளின் முகத்தை புகைப்படம் எடுக்கும் முறையை உடனடியாகக் கைவிட வேண்டும்.
மே மாதம் கோடை விடுமுறை அளிக்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மினி மையத்திலிருந்து பிரதான மையங்களுக்கு பதவி உயர்வில் சென்றவர்களுக்கு இன்கிரிமென்ட் வழங்க வேண்டும். 5 வருடம் பணி முடித்த மினி மைய ஊழியர்களுக்கும், 10 வருடம் பணி முடித்த உதவியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்கும்போது மாவட்ட அளவிலான முதுநிலை பட்டியல் தயாரித்து சீனியாரிட்டி வழங்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணை தலைவர் எஸ்.மணிமாலை, மாவட்ட தலைவர் எஸ்.ராதாமணி, செயலாளர் எஸ்.சாந்தி மற்றும் செயற்குழு உறுப்பினர் எஸ்.பூங்கொடி ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் மு.சீனிவாசன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் ச.விஜயமனோகரன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ரமேஷ், சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், செயலாளர் எச்.ஸ்ரீராம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பெருந்திரளான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
0 coment rios: