ஈரோட்டில் வீட்டு பிரச்சனையில், தாய் மகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்ணீர் மல்க எஸ்பியிடம் புகார்!
ஈரோடு ஃபயர் சர்வீஸ் பின்புறம் உள்ள ஈஸ்வரன் வீதியில் வசித்து வரும் நாகலட்சுமி இவரது மகள் இந்துமதி, இவர்கள் இருவருக்கும் திருமணமாகி கணவர்கள் இல்லாமல் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாக லட்சுமியும், இந்துமதியும் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அந்த புகார் மனு மற்றும் பாதிக்கப்பட்ட தாயும் மகளும் அளித்த பேட்டியில், இந்நிலையில், திருப்பூரில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ரீட்டா மேரி என்பவருக்கும் வீடு சம்பந்தமான பிரச்சனை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தாங்கள் வசித்து வரும் வீடு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆரோக்கியசாமி என்பவரிடம் வாங்கியுள்ளனர்.
அந்த வீட்டிற்கு பட்டா இல்லை எனவும், பட்டாவிற்கு பதிலாக பச்சைத் தாளில் எழுதிக் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என கூறியதாகவும், ஆரோக்கியசாமி தற்போது உயிருடன் இல்லை என தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரீட்டா மேரி என்பவர், எங்களது வீட்டிற்கு வந்து வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்துள்ளேன் எனக்கூறி மாநகராட்சிக்கு கட்ட வேண்டிய வரியை சரியாக கட்டுகிறீர்களா என கேட்டு, நான்கைந்து ரசீதுகள் மற்றும் ரீட்டா மேரி கூறிய தஷ்த்தவேஜ்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்று விட்டு, தற்போது அந்த வீடு என்னுடையது என ரீட்டா மேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்நிலையில்தான் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அடியார்களுடன் நாகலட்சுமி அவரது மகள் இந்துமதி வசித்து வரும் வீட்டிற்குள் புகுந்து இந்த வீடு எனது வீடு எனக் கூறி இருவரையும் வீட்டை காலி செய்யுமாறு மிரட்டி சென்றுள்ளனர். துணை இன்றி வசித்து வரும் பயந்து போன நாகலட்சுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஷ விஷம் குடித்த பின்னர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் "இனி எந்த பிரச்சனையும் வராது" என காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தங்களது வீட்டில் நிம்மதியாக வாழலாம் என நினைத்திருந்த நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில், திமுக பிரமுகர் தினகரன் என்பவர் தலைமையில் திடீரென வீட்டிற்குள் நுழைந்த கும்பல் நாகலட்சுமி, மகள் இந்துமதியிடம் பாலியல் துன்புறுத்ததில் ஈடுபட்டதுடன், பொய் கேஸ் போட்டு உன்னை உள்ளே தள்ளி விடுவேன் என மிரட்டி வீட்டை காலி செய்யுமாறு தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.
0 coment rios: