சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை சீரமைப்பதில் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்களை தீர்த்து சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பாஜகவினர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்தக் கோவிலில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை கோமாதா பூஜை மாதாந்திர சஷ்டி பூஜை கிருத்திகை நட்சத்திர பூஜை தைப்பூச தேர்த்திருவிழா பங்குனி உத்தரவு திருவிழா மற்றும் அனைத்து முகூர்த்த நாட்களிலும் 10 முதல் 20 திருமணங்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.மேலும் அதுபோக சென்னிமலை முருகனுக்கு பொதுமக்கள் சார்பில் பல விழாக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் வருடம் முழுவதும் விழாக்களை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முருகனை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் மூலமாக வந்து செல்கின்றனர். இதனால் விழா காலங்களில் போக்குவரத்து நேசர்களை குறைக்கும் வகையில் சென்னிமலை மலைப்பாதியை அகலப்படுத்தும் மணியை தமிழக அரசின் இந்து அரணைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சில இடங்களில் குறிப்பாக மலைப்பாதையில் வளைவுகளில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு சென்னிமலை மலை பாதியை அகலப்படுத்தும் பணியை தமிழக அரசு இந்து அறநிலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தப் பணிக்கு வனத்துறை ஒப்புதல் அளிக்காத மட்டுமல்லாமல் மலைப்பாதியை செப்பனிடும் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். இதனால் முருக பக்தர்கள் தரிசிக்க செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ள வண்டிகளை நிறுத்திடங்களில் வனத்துறை என தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் வாகன நிறுத்துவதிலும் எடுப்பதிலும் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டுஉரிய நடவடிக்கை எடுத்து விரைவில் மலைப் பாதையை சீரமைக்கும் பணியை முடித்து தர வேண்டும் என தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் அக்கட்சியினர் மனு அளித்தனர்.
0 coment rios: