பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் கலந்து கொண்ட மே தின பேரணி ...
தொழிலாளர்களின் உழைப்பை போற்றும் வகையில் நாடு தோறும் மே தினம் விழா விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் முனியப்பன், ரங்கநாதன் தலைமையில் மே தின பேரணி நடைபெற்றது.
இப்பேரணியானது, ஈரோடு சிக்கயநாயக்கர் அரசு கல்லூரியில் இருந்து துவங்கி வீரப்பன்சத்திரம், பேருந்து நிலையம், சத்தி சாலை, மணிக்கூண்டு, வழியாக வந்து இறுதியாக ஈஸ்வரன் கோவில் அருகே நிறைவடைந்தது. இந்த பேரணியை பாமக மத்திய மாவட்ட செயலாளர் எஸ் ஆர் ராஜு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் பேண்ட் வாதிய இசைக்களுக்கு ஏற்ப உற்சாகமாக கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொண்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் அசைவ உணவு வழங்கப்பட்டது.
இப்பேரணியில் மாநகர் மாவட்டத் தலைவர் பிரபு, மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், மாநில துணைத் தலைவர்கள் எஸ்.எல் பரமசிவம், எம்பி வெங்கடாசலம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் அய்யம்மாள், மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, முருகன் கணேஷ் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: