வியாழன், 17 ஜூலை, 2025

தனது பிறந்தநாளில் ஆதரவற்ற முதியவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கியதுடன் ஆடி முதல் நாளில் தேங்காய் சுடுவதற்கான மூலப்பொருட்களை வழங்கி மகிழ்ந்த சிறந்த சேவை போராளி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தனது பிறந்தநாளில் ஆதரவற்ற முதியவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கியதுடன் ஆடி முதல் நாளில் தேங்காய் சுடுவதற்கான மூலப்பொருட்களை வழங்கி மகிழ்ந்த சிறந்த சேவை போராளி. 

சேலம் பொன்னம்மாப்பேட்டை புத்துமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தெய்வவலிங்கம். வழக்கறிஞரான இவர், சேலம் மாநகராட்சியின் 9 வது கோட்ட மாமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். ஏற்கனவே பல்வேறு சமூக  சேவைகளை மேற்கொண்டு வரும் இவர்,  தெய்வா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றினை துவக்கி நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட ஏழை எளிய முதியவர்களுக்கு காலை சிற்றுண்டிகளை வழங்கி மகிழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தனது தெய்வா அறக்கட்டளை துவக்கி 154வது நாளான இன்று, அதுமட்டுமில்லாமல் இன்று ஆடி முதல் நாள் என்பதாலும் தனது 50 வது பிறந்தநாள் என்பதாலும் பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் அருகே தெய்வா  அறக்கட்டளையின் சார்பில் 250 க்கும் மேற்பட்ட ஏழை எளிய முதியவர்களுக்கு வழக்கம் போல காலை சிற்றுண்டிகளை வழங்கி மகிழ்ந்த வழக்கறிஞரும், மாமன்ற உறுப்பினரும் மற்றும் சிறந்த சமூக சேவை போராளியுமான தெய்வலிங்கம்,
ஆடி முதல் நாளில் இந்துக்கள் தேங்காய் சுட்டு இறைவனுக்கு படைத்து வழிபடுவது வழக்கமான ஒன்றாக கருதும் நிலையில், தேங்காய் சுடுவதற்காக தேங்காய் மற்றும் குச்சி தேங்காய் உள்ளே  செலுத்துவதற்கான மூலப் பொருட்களை வழங்கி மகிழ்ந்தார் சிறந்த சமூக சேவை செயற்பாட்டாளர் தெய்வலிங்கம். காலை சிற்றுண்டி மற்றும் தேங்காய் சுடுவதற்கான மூலப்பொருட்களை பெற்ற பயனாளிகள் அனைவரும் சமூக சேவையாளர் தெய்வலிங்கத்திற்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இதேபோன்று சேலம் மாநகராட்சியின் 9வது கோட்ட தூய்மை பணியாளர்கள் மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்தின் 50 வது பிறந்த நாளை ஒட்டி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளை வழங்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் வழக்கறிஞர் தெய்வலிங்கத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தெய்வா அறக்கட்டளை நிர்வாகிகள் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: