ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் லஞ்ச வீடியோ பரபரப்பு — பிட்னஸ் சர்டிபிகேட்டுக்கு மாணவிகளின் பெற்றோரிடம் பணம் கோரப்பட்டதாக குற்றச்சாட்டு..!
ஈரோட்டையை சேர்ந்த இரண்டு என்.சி.சி. மாணவிகள் உடல் தகுதி சான்றிதழ் (பிட்னஸ் சர்டிபிகேட்) பெறுவதற்காக நேற்று அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. தேவையான சோதனைகளுக்காக அவர்கள் கண் பரிசோதனை மையத்துக்கு செல்ல, அங்கு பணியாற்றிய ஜி.எச். ஊழியர் ஒருவர் அவர்களிடம் தொடர்பு கொண்டதாக தகவல்
அப்போது அந்த ஊழியர், மருத்துவ சான்றிதழில் டாக்டரின் கையெழுத்து பெற வேண்டுமெனில் பணம் கொடுக்க வேண்டும் என்று இரு மாணவிகளின் பெற்றோரிடம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சான்றிதழைப் பெறும் நோக்கத்தில், பெற்றோர் லஞ்சம் வழங்கும் காட்சி வீடியோவாக பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது
இவ்வீடியோ வெளிவந்ததை அடுத்து, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது
“லஞ்சம் வாங்கிய அந்த ஊழியர் மட்டுமல்ல, இதில் தொடர்புடைய டாக்டர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்
அரசு மருத்துவமனைக்குள்ளேயே இப்படிப்பட்ட சம்பவம் நடந்து இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
ஈரோட்டில் இந்த விடியம் தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி, மருத்துவமனை நிர்வாகத்தையும் பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
பவானி குட்டி.


0 coment rios: