சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் 27 தொகுதிகளிலும் வெற்றி என்பது மிகக் கடினமாக இருக்கும். தமிழக விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த மத்திய அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக தகவல்.
2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதனையே தமிழக விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் புறக்கணித்து வருகிறது என்பது விவசாய பெருங்குடி மக்களின் ஒட்டுமொத்த குற்றச்சாட்டாகவே உள்ளது. இந்த நிலையில், உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.
அதில் மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு லாபகரமான விலையான MSP-யை இதுவரை நிர்ணயம் செய்து அறிவிக்காததால் தமிழகத்தில் அடுத்த ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக விவசாயிகளின் பிரதிபலிப்பாக பாஜக கட்சி சார்பில் போட்டியிடும் 27 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் மூலம் மத்திய பாஜக அரசுக்கு நினைவு படுத்துகிறது என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.



0 coment rios: