சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில இணை செயலாளராக சேலத்தைச் சேர்ந்த இமாம் மொஹிதீன் நியமனம். மாநிலத் தலைவர் முன்மொழிந்ததை தொடர்ந்து தேசிய தலைவர் நியமித்ததற்கு, இமாம் மொஹிதீன் நன்றி.
சேலத்தைச் சேர்ந்தவர் இமாம் மொஹிதீன். தொழிலதிபரான இவர், சிறந்த சமூக சேவகரும் கூட. இந்த நிலையில் அகில இந்திய தேசிய மஜ்லிஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சிப் பணியும் செவ்வனை செய்து வந்தார். கட்சியின் செயல்பாடுகளையும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் தங்குதலையின்றி செவ்வனே செய்து வந்துள்ளார் இமாம் மொஹிதீன்.
கட்சி பணிகளின் சேவையை பாராட்டி, மாநிலத் தலைவர் வக்கீல் அகமது அவர்கள் தேசிய தலைமைக்கு முன்மொழிந்ததை அடுத்து தேசிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசதுத்தீன் உவைசி அவர்கள் சேலத்தை சேர்ந்த இமாம் மொஹிதீனை அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில இணை செயலாளராக நியமனம் செய்து அதற்கான கடிதத்தையும் வெளியிட்டுள்ளார். மாநில இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள இமாம் மொஹிதீனுக்கு, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ள இமாம் மொஹிதீனுக்கு மாநில பொதுச்செயலாளர் உட்பட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.



0 coment rios: