புதன், 13 மே, 2026

மருத்துவ காப்பீட்டி சுமார் 6 கோடி ஊழல் செய்த ஊழியரை மிரட்டி பறிமுதல் செய்த தரூன் மருத்துவ நிர்வாகம். பாதிக்கபட்ட சிகிச்சை பெற்ற அனைவருக்கும் திரும்ப கொடுக்க வேண்டும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவர் ஆன சரஸ்ராம் ரவி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

மருத்துவ காப்பீட்டி சுமார் 6 கோடி ஊழல் செய்த ஊழியரை மிரட்டி பறிமுதல் செய்த 
தரூன் மருத்துவ நிர்வாகம். பாதிக்கபட்ட சிகிச்சை பெற்ற அனைவருக்கும் திரும்ப கொடுக்க வேண்டும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவர் ஆன சரஸ்ராம் ரவி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல். 


சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே அமைந்துள்ள தரூன் சிறப்பு மருத்துவமனையில், நிகழ்ந்து வரும் மருத்துவ காப்பீட்டு ஊழல் குறித்து தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி அவர்களுக்கு பலகட்ட புகார்கள் வந்ததன் அடிப்படையில், அமைப்பின் தலைவர் சரஸ்ராம் ரவி தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவினர் அதிரடி விசாரணையில் இறங்கினர். இது குறித்து சரஸ்ராம் ரவி நம்முடைய கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக சேலம் சீலநாயக்கன்பட்டி தருண் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்ற ஆயிரகணக்கான நோயாளிகளின் மருத்துவ சிகிச்சை செலவை அவர்களது காப்பீடு mediclaim Insurer T.P.A வாயிலாக பெறபட்டதுடன், சில மருத்துவமனை மருத்துவர்,  ஊழியர்கள் இன்சூரன்ஸ் தொகைக்கு மேலாக ஒவ்வொரு உள் சிகிச்சை பெற்ற நோயாளிகளிடமும் அதிகமான பணத்தை வாங்கி  உள்ளதாக தகவல் கிடைத்ததாகவும். அதன் அடிப்படையில் பல கோடி பணம் காப்பீட்டில் ஊழல் நடந்துள்ளதாக தெரிகிறது என்று குறிப்பிட்ட அவர், சில நாட்களுக்கு முன் மருத்துவமனை Audit செய்தபோது ஒரு ஊழியர் மட்டும் 6 கோடிகள் வரை பொது மக்கள் அதாவது தரூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பொதுமக்களிடம் இன்சூரன்ஸ் தொகைக்கு மேலாக பணம் பெறபட்டு மருத்துவ மனை நிர்வாகத்தை ஏமாற்றி ஊழல் செய்திருப்பதை internal Audit நிர்வாகம்  கண்டுகிடிக்கபட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். 
மேலும் சுமார் 6 கோடி ஊழல் செய்த ஒரு ஊழியரை மிரட்டி அவர் செய்த ஊழல் பணத்தில் வாங்கிய வீடு,  விவசாய நிலம், வங்கி ரொக்கம் சுமார் 50 லட்சம்  ஆக சுமார் 5 கோடி திரும்ப பெற்ற தரூன் மருத்துவ நிர்வாகம் அதை பாதிக்கபட்ட சிகிச்சை பெற்ற அனைவருக்கும் திரும்ப கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி தலைமையிலான உண்மை கண்டறியும் விசாரணை குழுவினர் நேற்று மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்ட போது ஒரு நாள் கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை வேறு மாதிரியாக இருக்கும் என்றும் சரஸ்ராம்ரவி நமது தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: