புதன், 15 ஜூலை, 2026

பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ராமதாஸ் அணியில் இருந்த நிர்வாகிகள் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் ....16ஆம் தேதி காலை பிசிசி திருமண மண்டபத்தில் தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் வருகை தர உள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் பேட்டி....

சேலம்,
S.K. சுரேஷ் பாபு. 

பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ராமதாஸ் அணியில் இருந்த நிர்வாகிகள் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் ....
16ஆம் தேதி காலை பிசிசி திருமண மண்டபத்தில் தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் வருகை தர உள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் பேட்டி....

அரசியல் துரோகம் என ராமதாஸ் தெரிவித்தது தொடர்ந்து நாங்கள் என்ன செய்வது என தெரியவில்லை - அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய நிர்வாகிகள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது - தமிழகம் முழுவதும் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் அடுத்த கட்ட முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் தெரிவித்தார்
மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் அவர்களின் ஆலோசனை கேட்ட பிறகு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். டாக்டர் அன்புமணி ராமதாஸ் ராமதாஸ் இருவரும் பிரியவே கூடாது என நாங்கள் வலியுறுத்தினோம் 5.8 சதவீதம் வாக்குகள் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிகளின் வாக்குகள் சிதறும் என தெரிவித்தோம் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் மேற்பட்ட நிர்வாகிகள் வருவார்கள் அவர்களுக்கு ஒரு சீட்டு கொடுக்கப்படும் அதில் தங்களது கருத்துக்கள் தெரிவிக்க வலியுறுத்த உள்ளம் என தெரிவித்தார்.
பெரும்பாலான பொறுப்பாளர்கள் பாமக கட்சியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினால் அவர்களின் முடிவு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். அருள் ஜி கே மணி இருவரும் அன்புமணியை அதிகம் விமர்சித்துஉள்ளீர்கள் தற்போது பாமகவில் உங்களை அவர்கள் நினைத்துக் கொள்ள அன்புமணி ஒத்துக் கொள்வாரா என கேட்ட கேள்விக்கு நாங்கள் பெரிய தவறு ஒன்றும் செய்யவில்லை என தெரிவித்தார் அன்புமணி சம்பந்தமாக நான் பேசிய அனைத்து உரையாடல்களும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கூறிய நாங்கள் பேசினோம் எனவும் தெரிவித்தார். தந்தை மகன் இருவரும் இணைந்த பிறகு மருத்துவர் ராமதாசை தனியாக தன்னை சந்திக்க அனுமதிக்கவில்லை என அருள் தெரிவித்தார். ஜிகே மணி மற்றும் காந்திமதி அவர்களுக்கு நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
நாளை கட்சி துவங்கி 38 ஆண்டுகள் துவங்க உள்ளது இனிப்புகள் வழங்கி கொண்டாடும் நிகழ்ச்சி நாளை நடைபெறும் எனவும் தெரிவித்தார் மருத்துவர் ராமதாஸ் அவர்களுடன் 40 ஆண்டுகளாக பயணித்த அனைவரும் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: