வியாழன், 2 ஜூலை, 2026

தமிழக மனித வளத்துறை அமைச்சர் விவகாரத்தில் திமுக கபட நாடகம் ஆடி வருகிறது. தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் மாநில தலைவர் நாகா.அரவிந்தன் குற்றச்சாட்டு.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

தமிழக மனித வளத்துறை அமைச்சர் விவகாரத்தில் திமுக கபட நாடகம் ஆடி வருகிறது. தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் மாநில தலைவர் நாகா.அரவிந்தன் குற்றச்சாட்டு.

தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர்  கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் நாகா.அரவிந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள tvk தலைமையான தமிழக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தற்பொழுது வரை மிகச் சிறப்பாக செயல்படுவதற்கு தங்களது அமைப்பின் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கள்வதாக குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு மனித வளத்துறை அமைச்சர் சரத்குமார் அவர்கள் வீடியோவை திமுக அரசு கையில் எடுத்துக்கொண்டு அவர் மீது பொய் பழி சுமத்துவது மோசமான செயல் திமுகவின் கபட நாடகத்தை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பெண்களுக்கென்று தனித்துவமாக சிங்கப்பெண் படை என்று அமைத்துள்ளது வரவேற்கத்தக்க செயல் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழக வெற்றி கழகத்திற்கு நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்கள் கூட்டமைப்பின் சார்பாக முழு ஆதரவை அளிப்போம் என்று தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது,  கோட்டை மாரியப்பன், கேசவன்,குமார், உட்பட கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: