சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம். ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனரும் தலைவருமான அதியமான் கலந்து கொண்டு நான்கு மாவட்ட நிர்வாகிகளுடன் முக்கிய முடிவு.
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்து அரசியல் கட்சியினரின் கோரிக்கையாகவே இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் திருவா கவுண்டனூரில் நடைபெற்றது. ஆதித்தமிழர் பேரவையின் சேலம் மத்திய மாவட்ட செயலாளரும் மாநில துணைச் செயலாளருமான ஏ.டி.ஆர். சந்திரன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் 4 மாவட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்த கூட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனரும் தலைவருமான அதியமான் தலைமை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பேரவையின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. தொடர்ந்து தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் அவசியம் குறித்தும் அதன் தேவைகள் குறித்தும் நிறுவனரும் தலைவருமான அதியமான் 4 மாவட்ட நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். நான்கு மாவட்ட நிர்வாகிகள் பல்வேறு ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசும் போது, தமிழக அரசு தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது என்றும் அண்டை மாநிலங்களை போன்று தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் வேண்டுமென்று கூறிய ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் உள் ஒதுக்கீடு நியமனம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் ஆதிதிராவிடர் என்பது தனிப்பட்ட ஜாதி என்பதை குறிப்பதால் ஒட்டுமொத்த ஆதிதிராவிடர் நலத்துறையும் சமூக நீதித்துறை என மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றார். மேலும் அவர் கூறுகையில் தமிழக அமைச்சரவையில் 3 அருந்ததியருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றும் தற்பொழுது ஒருவர் மட்டுமே அமைச்சர் பதவியில் உள்ளதாகவும், ஆதிதிராவிடர் பெயரை மாற்றி சொல்வதால் நாங்கள் திராவிடத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்றும் அதியமான் குறிப்பிட்டார்.



0 coment rios: