நாமக்கல்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழ்நாடு அரசு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கும் பட்சத்தில் வரும் 1.9.2026 ந் தேதி முதல் தமிழகத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தியை தமிழக விவசாயிகள் நிறுத்துவார்கள். மேலும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாடு அரசு கொண்டு வரும் பட்சத்தில் தமிழக விவசாயிகளை ஒன்று திரட்டி தடுத்து நிறுத்தி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கடுமையான எச்சரிக்கை.
மேகதாது அணை விவகாரம் மற்றும் தமிழகத்திற்கான காவிரி பங்கு உரிமை நீர் பெறுவது தொடர்பாக கர்நாடக அரசுக்கு தொடர் போராட்ட எச்சரிக்கை விடுத்து, அதனை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர்.வேலுச்சாமி தமிழக அரசுக்கு எதிராக கடுமையான போராட்ட எச்சரிக்கையினை அறிவித்துள்ளார்.
அந்த செய்தி குறிப்பில், தமிழகத்தில் தவெக அரசு, தேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதி எதுவும் ஆட்சி பொறுப்பிற்கு வந்ததும் நிறைவேற்றவில்லை.
தற்போது தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது, மேலும் விவசாயிகள் பயிர் செய்ய தேவையான இடு பொருட்களின் விலை வெளிச் சந்தையில் பல மடங்கு அதிகரித்துள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு வெளி சந்தையில் கட்டுப்படியான விலை இல்லை இதனை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தமிழக விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய பயிர் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய, விவசாயிகள் வைத்த கோரிக்கையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கும் பட்சத்தில் 1.9.2026 ந் தேதி முதல் தமிழகத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்கள், பால் உட்பட அத்தியாவசிய பொருட்களின் சப்ளை இல்லாமல் தமிழக விவசாயிகள் நிறுத்துவார்கள். மேலும் தமிழக மக்கள் நலன் கருதி தமிழத்தை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தால் தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தடுத்து நிறுத்துவோம் தமிழ்நாடு அரசு தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தவறினால் தமிழ்நாடு அரசை கடந்த காலங்களை போல், தொடர் போராட்டம் வாயிலாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் பணியவைக்கும் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தெறிவித்கொள்கிறேன் என்று தலைவர் ஆர்.வேலுச்சாமி கடுமையான எச்சரிக்கையினை அறிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகளின் நலனில் கருத்தை கொள்ளாமல் தொடர்ச்சியாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்கும் தமிழக அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் மேற்கொள்ளும் தொடர் போராட்டங்களால் ஏற்படும் அசௌகர்யங்களை பொறுத்துக் கொள்ளுமாறும் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக மக்களின் கேட்டுக் கொண்டுள்ளார்.



0 coment rios: