சேலம்,
S.K. சுரேஷ் பாபு.
சேலம் கிச்சிபாளையத்தில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருட்டை தொடர்ந்து, வாகன எரிப்பு சம்பவம். காவல்துறையினரின் பாதுகாப்பு அதிருப்தியாக உள்ளது என பொதுமக்கள் வேதனை.
சேலம் மாநகர காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது, சேலம் கிச்சிபாளையம் காவல் நிலைய பகுதி. 42,43 மற்றும் 44 ஆகிய கோட்ட பகுதிகள் உள்ளடக்கியது. ஒரு காலகட்டத்தில் கிச்சிப்பாளையம் என்ற பெயரை கேட்டாலே மாநகரம் ஏன் மாவட்ட மக்களையும் உழுக்கும் பகுதியாக இருந்து வந்தது. மிரள வைக்கும் அளவிற்கு கொலைச் சம்பவங்கள், வழிப்பறி உள்ளிட்ட செயல்களின் தலைமை இடமாக இருந்தது சேலம் கிச்சிபாளையம். சேலம் மாநகர காவல் துறையின் சீறிய முயற்சியின் காரணமாக தற்பொழுது மேற்கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் நீங்கி பொதுமக்கள் இயல்பாக வாழக்கூடிய ஒரு சூழலில் உருவாகியுள்ள இந்த நிலையில், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கிச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களில் இருந்து பெற்றோர்களை திருடுவதும், ஒரு கட்டத்தில் வாகனங்களை களவாடுவதும் தொடர்ச்சியாக இருந்து வந்த நிலையில் தற்பொழுது புதிய பிரச்சினையாக கிச்சிப்பாளையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை எரிக்கும் நிகழ்வு அன்றாட நிகழ்ந்து கொண்டிருப்பது சாமானிய மக்களை வேதனையின் உச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் சேலம் மாநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிச்சிப்பாளையம் காவல் நிலையம் அருகிலேயே மர்ம நபர்களால் இரவு நேரங்களில் பெட்ரோலை திருடி வாகன எரிப்பு சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 17ஆம் தேதி இரவு நடைபெற்ற இந்த படுபாதக செயல் குறித்து சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தற்பொழுது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அந்த பகுதி பொது மக்களின் ஒட்டுமொத்த குற்றச்சாட்டாகவே உள்ளது. இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணிக்கு வருகின்றார்களா இல்லையா எதை நம்பி கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் வாகனத்தை வெளியில் நிறுத்துவது என்ற சந்தேகத்தில் வாழ்ந்து வருவதாக விரக்தியின் உச்சத்தில் பேசிய பொது மக்களின் வேதனை குரல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருந்தது. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த குற்ற செயல் குறித்து சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பால்ராஜ் அவர்களையே சாரும். என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



0 coment rios: