ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

சேலத்தில் விமர்சையாக நடைபெற்ற ராஜகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பிற்கு இடையே பக்த கோடிகளுக்கான அனைத்து அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தி செய்து தரப்பட்டுள்ளது. அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தினர் பெருமிதம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் விமர்சையாக நடைபெற்ற ராஜகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பிற்கு இடையே பக்த கோடிகளுக்கான அனைத்து அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தி செய்து தரப்பட்டுள்ளது. அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தினர் பெருமிதம். 

சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான  திருக்கோயில். மூலவர் விநாயகர் பெருமான் ஒவ்வொரு நாளும் ராஜ அலங்காரத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளிப்பதால், இவருக்கு 'ராஜகணபதி' என்ற திருநாமம் ஏற்பட்டது. சேலம் பகுதி மன்னர்கள் காலத்தில் காடுகளும் மலைகளும் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் 'சைலதேசம்' என்று அழைக்கப்பட்டது. அப்போது மன்னர்கள் விநாயகப் பெருமானைத் தங்களைத் தீமைகளிலிருந்து காக்கும் காவல் தெய்வமாகக் கருதி வழிபட்டனர். சேலம் நகரின் மையத்தில் முதல் அக்ராஹாரத்தில் தேரடி (Car House) சந்திப்புக்கு அருகில் சுகவனேஸ்வரர் திருக்கோயிலுக்கு மிக அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. புதிய தொழில் தொடங்குதல், திருமணப் பத்திரிகைகள் வைத்தல், வாகனப் புத்தாண்டு சாவிகள் மற்றும் முக்கியமான ஆவணங்களை விநாயகர் விக்ரகத்தின் அடியில் வைத்து வழிபடுதல் இங்கு சிறப்பு. மேலும், உலகப் புகழ்பெற்ற வல்லப கணபதி திருமண வரவேற்பு கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
திருக்கோவில் வளாகத்தில் ஆகம விதிமுறைப்படி அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் நான்கு கால பூஜைகள் பூர்த்தியானதை தொடர்ந்து புனித நீர் கலச ஊர்வலம் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலில் கோபுர கலசத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து புனித நீர் ஊற்றி திருக்கோவில் சிவாச்சாரியார்கள் குடமுழுக்கு விழாவினை வெகு விமர்சையாக நடத்தி வைத்தனர். தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாவட்ட செயலாளர் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான விஜய் தமிழன் பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலின் கும்பாபிஷேக விழாவினை சிறப்பித்தார். பின்னர் குடமுழுக்கு விழா நடைபெற்றதை தொடர்ந்து விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் திருக்கோவிலின் சார்பில் மகா அன்னதான நிகழ்வும் நடைபெற்றன. இது தவிர பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஆங்காங்கே பக்தர்களின் நலனுக்காக சிற்றுண்டிகள் குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன. திருக்கோவில் திரு குடமுழுக்கு விழாவிற்காக கடைவீதி முதல் அக்ரகாரம் இரண்டாவது அக்ரஹார பகுதிகள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. 
இந்த குடமுழுக்கு விழாவில் சேலம் மாநகரம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏன் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இரட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராஜ கணபதியின் அருள் பெற்று சென்றனர். இந்த கும்பாபிஷேக விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சேலம் மாநகர காவல் துறை மிகச் சிறப்பாக செய்திருந்ததாகவும் இந்த விழாவிற்காக வருகை தந்த ஏராளமான பக்தர்களின் நலன் கருதி அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அன்னதானம் மற்றும் குடிநீர்  பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ள தோடு தொடர்ச்சியாக நடைபெற உள்ள மண்டல பூஜைகளில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கும் அதனை தொடர்ந்து வரும் விநாயகர் சதுர்த்தி விழா வரை பக்தர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளும் செய்து தரப்பட உள்ளதாகவும், கும்பாபிஷேக விழாவை தொடர்ந்தஅ நடைபெற உள்ள மண்டல பூஜை மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் விநாயகர் சதுர்த்தி விழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு வரும் பக்தர்கள் தங்களது உடைமைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் பொதுமக்களின் உடமைகளை களவாடவும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர், அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தின் மாநில இணை செயலாளர் சண்முகவேல் மற்றும் மாவட்ட செயலாளர் சண்முகம் ஆகியோர் தெரிவித்தனர். இந்த விழாவில் திருக்கோவிலில் அறங்காவலர் குழு தலைவரும் சோனா கல்வி குழுமத்தின் தலைவருமான வள்ளியப்பா மற்றும் திருமதி வள்ளியப்பா உள்ளிட்டோர் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சேலம் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி சேலம் மாநகரமே விழாக்கோலம் பூந்துள்ளது என்பது மட்டும் நிதர்சனம்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: