வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

ஆடிப்பூரத்தை ஒட்டி சேலத்தில் தேர் வீதி ஸ்ரீ பெரிய அங்காள பரமேஸ்வரிக்கு வளைகாப்பு நடத்திய சுமங்கலி பெண்கள். திருமணத்தடை குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலை வலியுறுத்தி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

ஆடிப்பூரத்தை ஒட்டி சேலத்தில் தேர் வீதி பெரிய அங்காள பரமேஸ்வரிக்கு வளைகாப்பு நடத்திய சுமங்கலி பெண்கள். திருமணத்தடை குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலை வலியுறுத்தி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம்.

ஆடிப்பூரம் என்பது தமிழ் மாதமான ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் வரும் நன்னாளில் கொண்டாடப்படும் சக்திக்குரிய மிகச் சிறப்பு வாய்ந்த விழாவாகும். இது உலக மக்களைக் காக்க உமாதேவி அவதரித்த நாளாகவும், பூமி தேவி ஆண்டாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் ஜெயந்தியாகவும் போற்றப்படுகிறது. உலக நல்வாழ்வுக்காகவும்  வளர்ச்சிக்காகவும் அம்பிகை சக்தியாக உருவெடுத்த நாள். இதனை ஒட்டி சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் ஆடிப்பூர விழா வெகு விமர்சையாகவும் சிறப்பு அபிஷேக அலங்காரங்களும் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக சேலம் தேர் வீதி ஸ்ரீ பெரிய அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர விழாவிற்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. அலங்கரிக்கப்பட்டிருந்த ஸ்ரீ அங்காளபரமேஸ்வரிக்கு மஞ்சள் குங்குமம் பால் திருமஞ்சனம் பஞ்சாமிர்தம் திருவாபரணம் உன்னுடைய பல்வேறு மங்களப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, தொடர்ந்து வளையல் மாலை சூட்டி வளைகாப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றன. திருக்கோவில் தர்மகர்த்தா சங்கர் பூசாரியின் மகன் சிவா முன் நின்று நடத்திய இந்த சிறப்பு பூஜையில், சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது வேண்டுதல்களை வலியுறுத்தி சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர். 
ஆடிப்பூரத் திருவிழா சிறப்பு பூஜையில் பங்கேற்றால் திருமணம் ஆகாத ஆண்களுக்கும் கன்னிப் பெண்களுக்கும் திருமணம் ஆகும் குழந்தை பேரு இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பேரு உண்டாகும் என்ற ஐதீகத்தின் காரணமாக ஏராளமான இளம் பெண்களும் இளைஞர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்ட இந்த பூஜையில் திருக்கோவிலில் பூசாரி சிவா அம்மனுக்கு வளைகாப்பு செய்து அதற்கான சடங்குகளை மேற்கொண்டார். தொடர்ந்து திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் வளைகாப்பு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இந்த விழாவின் சிறப்புகள் குறித்து சேலம் தேர் வீதி ஸ்ரீ பெரிய அங்காளம்மன்ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி பரமேஸ்வரி திருக்கோவிலின் தர்மகர்த்தாவின் மகன் சிவா நமது கூறுகையில், 
வைணவத் தலங்களில் பூமி தேவியின் அம்சமான ஆண்டாள் துளசி மாடத்தில் அவதரித்த திருநாளாகக் கொண்டாடப்படுகிறது என்று கூறிய அவர், அம்மன் கோயில்களில் அம்பிகைக்கு வளைகாப்பு மற்றும் சீமந்தம் நடத்தப்பட்டு வளையல்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன என்றும் வழிபாட்டு முறைகள் மற்றும் அம்மனுக்குச் சாற்றப்பட்ட வளையல்களை அணிந்து கொள்வதால் மாங்கல்ய பலம் பெருகும் மற்றும் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு வாரிசு யோகம் உண்டாகும் என்றார். மேலும்  திருமணமாகாதவர்கள் ஆண்டாளையும் அம்பிகையையும் வழிபட விரும்பிய நல்ல வாழ்க்கைத்துணை அமையும் என்று குறிப்பிட்ட சிவா,   வைணவக் கோயில்களிலும் வீடுகளிலும் ஆண்டாள் அருளிய திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பு என்றும் ஆடிப்பூரத்தன்று உங்கள் அருகில் உள்ள குறிப்பிட்ட அம்மன் அல்லது ஆண்டாள் ஆகியோரது கோயில்களுக்கு சென்று விசேஷ பூஜைகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து ஆடிப்பூர சிறப்பு பூஜையை ஒட்டி சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: