சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் ஆடிப்பெருக்கு நன்னாளில் அம்மனுக்கு தாலி மாற்றி சிறப்பு வழிபாடு.. அங்காளம்மனின் அதி தீவிர பக்தரின் சிறப்பு வழிபாட்டால் பக்தர்கள் நெகிழ்ச்சி....
ஆடிப்பெருக்கு (ஆடி 18) நன்னாளில் சுமங்கலிப் பெண்கள் தாலிக் கயிறு மாற்றுவது கணவரின் ஆயுளைக் கூட்டி, மாங்கல்ய பலத்தை பலமடங்கு பெருக்கும் என்பது முதன்மையான ஆன்மீக நம்பிக்கையாகும். இந்த சுபநாளில் செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் பலமடங்கு பெருகும் என்பதால், தாலி பிரித்துக் கோர்க்கும் வைபவத்திற்கு இந்நாள் மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது.
தாலி மாற்றும் வைபவத்தின் ஆன்மீக முக்கியத்துவம் மாங்கல்ய பலம் பெருகுதல். ஆடி 18 அன்று நதிக்கரைகளிலோ அல்லது வீட்டிலோ வழிபாடுகள் செய்து தாலிக்கயிறு மாற்றுவதால் கணவருக்கு நீண்ட ஆயுளும், குடும்பத்திற்கு வற்றாத செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் நவகிரகங்களுக்கும் நாயகிகளான அங்காளம்மன், மாரியம்மன், மற்றும் காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு இந்த புனித நாளில் தாலி மாற்றி சிறப்பு பூஜை மேற்கொண்ட சேலம் கிச்சிபாளையம் கொறகூடை அங்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் திரு வீட்டில் இதற்கான சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருக்கோவில் மற்றும் திருக்கோவில் வீட்டின் நிறுவனரும் மிகச்சிறந்த ஆன்மீகவாதியும் தீவிர சிவன் அடியாரான பன்னீர்செல்வம் சுவாமி ஜி ஏற்பாட்டின் பேரில், முன்னதாக திருக்கோவில் வீட்டில் மிகப் பிரம்மாண்டமான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனுக்காக ஐந்துக்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் மங்களப் பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து திருக்கோவிலில் சிவாச்சாரியார் பன்னீர்செல்வம் தலைமையில், ஆடிப்பெருக்கு திருநாளில் சுமங்கலி பெண்களுக்கு தாலி மாற்றும் வைபவம் ஒருபுறம் இருந்தாலும் அம்மனுக்கே திருமாங்கல்யத்தை மாற்றி சிறப்பு பூஜை மேற்கொண்டார். இந்த மாங்கல்யம் மாற்றும் சிறப்பு பூஜைகளுக்கான அனைத்து சேவைகளும் முடிந்ததன் பிறகு மகா தீபாராதனை காட்டும் போது திருக்கோவில் வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு இருள் சூழ்ந்த நேரத்தில் மகாதேவாரனை காட்டப்பட்டது பக்தர்களிடையே மிகப் பெரிய ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
இதனை அடுத்து இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மங்களப் பொருட்களுடன் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இதுகுறித்து சேலம் கிச்சிபாளையம் கொறகூடை அங்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் தலைவர் பன்னீர்செல்வம் நம்மிடையே கூறுகையில், வழக்கமாக சுமங்கலி பெண்கள் மேற்கொள்ளும் இந்த பூஜை ஒரு புறம் இருந்தாலும் நவகிரகங்களின் நாயகிகள் ஆக விளங்கும் அம்மனுக்கே திருமாங்கல்யம் மாற்றி சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இனிவரும் காலங்களில், தமிழகத்தில் விவசாயத் தொழில் முற்றிலும் பொய்த்துப் போகாமல் இருக்க நல்ல மழை பெய்து எப்பொழுதும் வற்றாத காவிரி ஆறாக மாறி தமிழக விவசாயிகளின் நலனை பெரிதும் பாதுகாக்கும் என்பதில் ஐயமில்லை என்றும் குறிப்பிட்டார்.



0 coment rios: