வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

சேலம் SKS மகளிர் நல மையத்தில், பிரத்யேக 'காஸ்மெட்டிக் கைனகாலஜி' (Cosmetic Gynecology) மற்றும் உயர்தர மகப்பேறு மருத்துவப் பிரிவுக்கான தொடக்க விழா

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் SKS மகளிர் நல மையத்தில், பிரத்யேக 'காஸ்மெட்டிக் கைனகாலஜி' (Cosmetic Gynecology) மற்றும் உயர்தர மகப்பேறு மருத்துவப் பிரிவுக்கான தொடக்க விழா

சேலம் ஃபேர்லேண்ட்ஸ், பிருந்தாவன் சாலையில் இயங்கி வரும் புகழ்பெற்ற SKS மகளிர் நல மற்றும் கருத்தரிப்பு மையம் (SKS Women's Health Clinic & Fertility Center), பெண்களின் முழுமையான நல்வாழ்வை உறுதி செய்வதில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. பெண்களின் ஆரோக்கியம், தன்னம்பிக்கை மற்றும் அழகியல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட 'காஸ்மெட்டிக் கைனகாலஜி', மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நலனுக்கான பிரத்யேக மருத்துவப் பிரிவின் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில், SKS மருத்துவமனையின் தலைவர் திருமதி ஸ்ரீ வசந்தா, நிர்வாக இயக்குநர் டாக்டர் சுரேஷ் விஸ்வநாதன், இயக்குநர் திருமதி சோமா நந்தா சுரேஷ், தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டாக்டர் சில்பி மணி மற்றும் கருத்தரிப்பு மற்றும் மகளிர் நல மருத்துவர் கவிதா நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். புதிய மருத்துவப் பிரிவின் ரிப்பன் வெட்டும் நிகழ்வை, நிர்வாக இயக்குநரின் குழந்தைகளான ஷைலின் மற்றும் ஷனாயா ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இது குறித்து SKS மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுரேஷ் விஸ்வநாதன் கூறுகையில், "சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்களில் கிடைக்கும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளைச் சேலம் மக்களுக்கும் இங்கேயே வழங்குவதே எங்கள் நோக்கமாகும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது, மனரீதியான தன்னம்பிக்கையும் மிகவும் முக்கியமானது," என்று தெரிவித்தார். மேலும் காஸ்மெட்டிக் கைணகாலஜி மற்றும் மம்மி மேக் ஓவர், விரிவான கர்ப்பகால பராமரிப்பு, அதிக ஆபத்துள்ள கர்ப்ப கால பராமரிப்பு மற்றும் நவீன கருத்தரிப்பு சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: