புதன், 23 செப்டம்பர், 2026

சேலம் கோட்டையில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா மற்றும் மஹ்மூத் சுபஹானி உரூஸ் விழா.. நாடு வளம் பெற சிறப்பு துவா செய்து 3000 பேருக்கு தப்ரூக் வழங்கிய இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு.

சேலம் கோட்டையில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா மற்றும் மஹ்மூத் சுபஹானி  உரூஸ் விழா.. நாடு வளம் பெற சிறப்பு துவா செய்து 3000 பேருக்கு தப்ரூக் வழங்கிய இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர். 

சேலம் கோட்டை மேல்தெரு பள்ளிவாசலில் ஆண்டு தோறும் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மஹ்மூத் சுபஹானி உரூஸ் விழா ஆகியவை விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி சேலம்  கோட்டை இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் 93 ஆம் ஆண்டு விழாவாக பிறந்தநாள் மற்றும் உரூஸ் விழா ஆகியவை சேலம் கோட்டை மேல் தெரு பள்ளிவாசலில் கடந்த 10 நாட்களாக சிறப்பு தொழுகைகளுடன் நடைபெற்று வந்தது. 
இதன் இறுதி நாளான நேற்று நாடு நலம் பெறவும், தமிழக விவசாயிகள் வளம் பெறவும் மற்றும் தமிழக மாணவ மாணவிகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்பன உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களை வலியுறுத்தி நேற்று இரவு சிறப்பு துவா நடத்தி முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சேலம் கோட்டை இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் ஆண்டுதோறும் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா மற்றும் மொஹமது சுபஹானி உரூஸ் விழாவினை ஒட்டி கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 3,000 அதிகமான இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் தப்புருக் எனப்படும் அன்னதானம் வழங்கி மகிழ்ந்தனர். 
40-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட டபராக்களில் சுமார் 3000 கிலோ வெள்ளை குஸ்கா, சிக்கன் வருவல், தால்ஜா மற்றும் கேசரி ஆகியவை தப்றுக்காக வழங்கப்பட்டன. சேலம் ஜாமியா மசூதியின் முன்னாள் முத்த வள்ளியும், சேலம் கோட்டை இளைஞர் நற்பணி மன்றத்தின் கௌரவ தலைவருமான அமான் என்கின்ற நாசர் கான் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இளைஞர் அறக்கட்டளை நிர்வாகிகள் தாஜுதீன், பண்டு, அஸ்மத் கான், நூர், அலி, பாபு, ஹமீது, ஜாவித் மற்றும் இர்பான் உள்ளிட்டோர் கலந்துகொண்டு 3000-க்கும் அதிகமான பொது மக்களுக்கு சைவ அசைவ உணவுகளை வழங்கி மத நல்லிணக்கத்தை போற்றி மகிழ்ந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: