சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலம் அருகே வைரலாகும் வேலியே பயிரை மேய்ந்த கதை. கோவில் நிலத்தை போலி பட்டா மூலம் அபகரித்த நபரே, சிவன் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல்.
சேலத்தை அடுத்துள்ளது காரிப்பட்டி. இங்குள்ள அண்ணாநகர் பகுதியில் பல தரப்பு மக்கள் வாசித்து வருகின்றனர். இந்த பலதரப்பட்ட மக்களால் கலந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு அக்னி மாரியம்மன் திருக்கோவில் கட்டப்பட்டது. பல தரப்பு மக்கள் வசித்து வரும் அண்ணா நகர் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த சம்பத் குமார் என்பவரும் வசித்து வருகிறார். இவரும் இந்த பலப்பட்டறை ஸ்ரீ அக்னி மாரியம்மன் திருக்கோவிலில் நிர்வாகியாகவும் இருந்து வந்துள்ளார். நிலைமையை எப்படி இருக்க, மீதமுள்ள கோவிலுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் சிவன் கோவிலையும் கட்ட அந்த பகுதி பலதரப்பட்ட மக்களால் முடிவு செய்யப்பட்டு, அங்குள்ள பல பட்டறை ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவிலுக்கு பின்புறமாக சிவன் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கட்டுமான பணிகளும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பலதரப்பட்ட மக்கள் மற்றும் அவர்கள் சார்ந்த உற்றார் உறவினர்களிடம் நன்கொடை வசூலித்து திருக்கோவில் கட்டும் பணிகளும் சிறப்பாகவே நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனிடையே அதே பகுதியை சேர்ந்த சம்பத்குமார் என்பவர் திருக்கோவிலுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் சுமார் 200 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்து, அவருக்கு சொந்தமான நிலத்தையும் சேர்த்து பிரம்மாண்டமான முறையில் வீட்டைக் கட்டி உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலுக்கு சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் போர் கொடி உயர்த்தி பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காரிப்பட்டி காவல் நிலையத்திலும், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அந்த பகுதி ஒட்டுமொத்த மக்களின் வேதனை குரலாகவே உள்ளது. இதனை அடுத்து செய்வது அறியாது தவித்த பொதுமக்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் நெருங்கிய தொடர்புடைய மெடிக்கல் ராஜா என்பவரை அனுப்பியுள்ளனர்.
ஆனாலும் அவரிடமும் திருக்கோவிலை கட்ட வேண்டும் என்று முயற்சித்த பொதுமக்களுக்கு விரக்தியே பதிலாக கிடைத்தது. காரணம் சம்பந்தப்பட்ட சம்பத்குமார் அரசுத்துறை அதிகாரிகளை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அரசியல் கட்சி பிரமுகரையும் கட்டுப்படுத்தும் அளவிற்கு வல்லமை படைத்தவரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. யாரை வைத்து திருக்கோவில் நிலத்தை போலி பட்டா மூலம் தயார் செய்து தனது நிலம் என்று கோவில் நிலத்தை அபகரித்த சம்பத்குமாருக்கு உதவிய நபர் யார் என்பது தங்களுக்கு தெரிய வேண்டும் என்பது மட்டுமே தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் ஒட்டுமொத்த குற்றச்சாட்டாகவே உள்ளது. இந்த நிலையில், நேற்றைய தினம் சிவபெருமானுக்கு உகந்ததாக கருதப்படும் பிரதோஷ தினம் என்பதால் விட்டு வரும் சிவன் கோவிலுக்கு முன்பாக நன்றி சிலையை பிரதிஷ்டை செய்ய ஊர் பொதுமக்கள் எடுத்துள்ளனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அதே பகுதியை சேர்ந்தவரும் அதே கோவிலுக்கு நிர்வாகக் குழுவில் இருந்த வருமான சம்பத்குமார் என்பவர், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு ஊர் பொதுமக்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு. இது குறித்து தகவல் அறிந்து நமது செய்திகளும் அங்கு பயணித்து பாதிக்கப்பட்ட மக்களிடம் கேட்டபோது, சம்பத்குமார் ஆக்கிரமித்துள்ளது திருக்கோவிலுக்கு சொந்தமான இடமே தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதற்கு உண்டான அனைத்து ஆதாரங்களையும் வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சிவன் கோவில் சொத்தை அபகரிக்க உடந்தையாக இருந்தவர் யார் என்பது தங்களுக்கு தெரிய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தனர். சிவன் கோவில் கட்டும்போது இருந்த மணமகழ்ச்சி தற்பொழுது கோவில் கட்டுமான பணி தொடங்கி நான்கு வருடங்கள் ஆகியும் தற்போது வரை நிறைவு பெறவில்லை என்று வேதனை தெரிவிக்கும் அந்த பகுதி பொதுமக்கள் தமிழக முதலமைச்சர் தனிவனம் செலுத்தி இந்த பிரச்சனையில் தலையிட்டு தங்களுக்கு உரிய தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது மட்டுமே அந்த பகுதி மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
சிவன் சொத்து கொலை நாசம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. சிவன் கோவில் சொத்தை அபகரித்ததோடு மட்டுமல்லாமல் எதிர்த்த போது மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பந்தப்பட்ட சம்பத்குமார் என்பவர் மீது மாவட்ட நிர்வாகமோ அல்லது மாவட்ட காவல் துறையோ கூடுதலாக தமிழக முதலமைச்சரோ நடவடிக்கை எடுக்கிறார்களோ இல்லையோ ?????. சிவன் சொத்தை கொள்ளை அடித்தவன் ஒருபோதும் கிட்ட சொத்துடன் அவன் நிம்மதியாக வாழ்ந்ததில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன சேலத்திலேயே. உதாரணம் 1008 சிவலிங்கம் திருக்கோவில் கட்டுவதற்காக, சிவன் சொத்தையே கொள்ளையடித்த விநாயகா மிஷன் தலைவரின் நிலை தற்பொழுது என்ன என்பது சேலம் மாநகரம் உட்பட இந்த நாடே அறியும்.
பொறுத்திருந்து பார்ப்போம்.



0 coment rios: