சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாவட்ட விஸ்வகர்மா தச்சு தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின், எழுச்சியாக நடைபெற்ற 11 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா. மாவட்டம் தோறும் விஸ்வகர்மா தச்சு தொழிலாளர்களுக்கு என தனியாக தொழில் பூங்கா தமிழக அரசு அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை.
அண்ட சராசரங்களின் நாயகனும், உலகைப் படைத்தவனும், சகல ஜீவராசிகளுக்கும் தலைவனும், பஞ்ச தொழில்களில் வல்லவனும், வேதங்களின் வடிவமும், சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்களைக் கொண்டவனும், விராட் புருஷனாக இருந்து நம்மையும் உலகையும் அருளுடன் காத்து ஆள்பவனுமான அந்த மகா புருஷனின் அவதாரத் திருநாளாக கொண்டாடப்பட்டு வரும் விஸ்வகர்மா ஜெயந்தி விழா சேலத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி விஸ்வகர்மா கட்சி தொழிலாளர்களின் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 11 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா சேலம் தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.
விஸ்வகர்மா தச்சு தொழிலாளர்களின் தச்சு தொழில் வளம் பெருகவும், சிறப்பான வாழ்வு அமைய வேண்டிய நடைப்பெற்ற இந்த விழாவிற்கு தலைவர் சுரேஷ் ஆச்சாரியார் தலைமை தாங்கினார். செயலாளர் கந்தசாமி ஆச்சாரியார், பொருளாளர் தினகரன் ஆச்சாரியார் மற்றும் அமைப்பாளர் தனசேகரன் ஆச்சாரியார் ஆகியோர் முன்னிலை வகித்த விழாவில், விஷ்வ தமிழ் கழகத்தின் மாநில தலைவர் சுடலைமுத்து ஆச்சாரி மற்றும் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் தில்லைகுமரன் ஆச்சாரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தனர்.
ஜெயந்தி விழாவில்,
சித்தர் கோவில் கிரிவலபாதை ஸ்ரீ ஜோடேஷன் பாலாத்ரிபுர சுந்தரி பீடத்தின் சிவகார்த்திகேயன் ஞானச்சாரி சுவாமிகள், சுகவனேஷ்வரன் சிவம்சுவாமிகள் மற்றும் மணிகண்ட சிவம் ஆச்சாரியார் முன்னின்று நடத்திய இந்த ஜெயந்தி விழாவில், ஸ்ரீ முந்தி நின்று செயல்களைத் தீர்மானித்து அளவற்ற பேரின்பத்தை அருளும் தெய்வங்களான ஸ்ரீ கற்பக விநாயகர் வழிபாடு, புனிதமான யாகம், பஞ்சகவ்யம், ஆச்சார்ய பூஜை, யக்ஞோபவீத தாரணம், மகா சங்கல்பம், மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. உனக்காக உற்சவர் ஸ்ரீ விராட் விஸ்வகர்மா புறப்பாடு சேலம் பெரமனூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சிதம்பர விநாயகர் ஆலயத்திலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க அந்தப் பகுதிகளின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் நடைபெறும் பின்னர் சேலம் தமிழ்ச்சங்கத்தை அடைந்தது.
ஜெயந்தி விழா குறித்தும் விஸ்வகர்மா சமுதாய மக்களின் நலனுக்காகவும் தமிழக அரசே ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் பூங்காக்களை அமைப்பது போல ஐந்து தொழில்களை உள்ளடக்கிய விஸ்வகர்மா தொழிலாளர்களுக்கு என்று தனி இடம் ஒதுக்கி தொழிற் பூங்காக்களை அமைத்து தரவேண்டும் என்றும் ஐந்து தொழில்களை உள்ளடக்கிய விஸ்வகர்மா தொழிலாளர்களின் எதிர்கால முன்னேற்றத்தினை கருத்தில் கொண்டு தமிழக அரசு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என்றும் சங்கத்தின் சட்ட ஆலோசகர் அப்பர் லக்ஷ்மணன் மற்றும் செயற்குழு உறுப்பினர் நாகராஜ் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். இந்த ஜெயந்தி விழாவில் துணை தலைவர்கள் தொழில் செயலாளர் மற்றும் விழா குழு மகளிர் அணியினர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வந்திருந்த முக்கிய நிர்வாகிகள் சமூகத்தை சேர்ந்தவர்களின் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



0 coment rios: