ஞாயிறு, 18 அக்டோபர், 2026

சேலத்தில் சுமார் 200 மாணவ மாணவிகளுக்கு கல்வி பரிசளித்து மகிழ்ந்த குலாலர் மண்பாண்ட தொழிலாளர் சங்க விழா.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் சுமார் 200 மாணவ மாணவிகளுக்கு கல்வி பரிசளித்து மகிழ்ந்த குலாலர் மண்பாண்ட தொழிலாளர் சங்க விழா. 

சேலம் மாவட்டம் மண்பாண்டத் தொழிலாளர் ( குலாலர் ) சங்கம் மற்றும் N. கலைச்செல்விநினைவு அறக்கட்டளை ஆகியவற்றில் சார்பில் 3-வது கல்வி விருது வழங்கும் விழா
மற்றும் நான்காம் ஆண்டு தொடக்க விழா ஆகியவை சேலம் பால் பண்ணை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் சேலம் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளரும் மாநில தலைவருமான ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநில பொதுச் செயலாளர் பொறியாளர் ராஜா மற்றும் பொருளாளர் கிருஷ்ணன் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர். தொடர்ந்து சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்ட கூட்டத்தில் சங்கத்திற்கான வரவு செலவு கணக்குகள் முன் வைக்கப்பட்டன. 
விழாவின் சிறப்பம்சங்கள் மண்பாண்ட தொழிலாளர்களின் முன்னேற்றம் குறித்தும் அவர்களது பிள்ளைகள் இந்த போட்டி மிகுந்த சமுதாயத்தில் எவ்வாறெல்லாம் முன்னேறுவது என்பது குறித்து சிறப்பு விருந்தினர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை எடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான குலாலர் சமுதாயத்தைச் சார்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. 
70 வயதிற்கு மேற்பட்ட மண்பாண்டத் தொழிலாளர்களைக் கௌரவித்தல், நல்லாசிரியர் விருது பெற்ற சிறந்த ஆசிரியர்களைக் கௌரவித்தல் மற்றும் கிளைச் சங்கங்களைத் தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. 
இந்த விழாவில் குலாலர் இளைஞர் சங்க நிர்வாகி சிமெண்ட் கார்த்தி உட்பட  அனைத்துச் மாவட்ட நிர்வாகிகள், கிளைச் சங்க நிர்வாகிகள் மற்றும் குலாலர்  பழங்குடியின சமூகத்தைச் சார்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: