சனி, 24 அக்டோபர், 2026

கரும்புக்கு உண்டான ஊக்கத் தொகை டன் ஒன்றுக்கு ரூ.700/ நிலுவையை தவெக அரசு உடனடியாக விரைந்து வழங்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். தித்திக்கும் தீபாவளியை இனிமையாக கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R. வேலுச்சாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

நாமக்கல்,
S.K. சுரேஷ் பாபு.

கரும்புக்கு  உண்டான ஊக்கத் தொகை டன் ஒன்றுக்கு ரூ.700/ நிலுவையை தவெக அரசு  உடனடியாக விரைந்து வழங்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். தித்திக்கும் தீபாவளியை இனிமையாக கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R. வேலுச்சாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

இது குறித்து உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஆர் வேலுச்சாமி வெளியீட்டு உள்ளே அறிகையில், 
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சி‌ காலத்தில் கரும்பு சாகுபடி செய்து சர்க்கரை ஆலைகளுக்கு அரவைக்கு அனுப்பிய கரும்பு விவசாயிகளுக்கு ஆதார விலையுடன் ஊக்க தொகையையும் சேர்த்து கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ 4,000/ ம் என விலை நிர்ணயம் செய்து 2024 -  2025 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் போது உழவர் நலத்துறை மானிய கோரிக்கையில் திமுக அரசு அறிவிப்பு வெளியிட்டது, ஆனால் அரசாணை தமிழ்நாடு அரசின் சார்பில் பல மாதங்களாக வெளியிடப்படாமல்  நிலுவையில் இருந்த நிலையை அறிந்த  தவெக அரசு கடந்த ஆட்சியில் அறிவித்ததை நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக  கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கரும்பு சர்க்கரை ஆலைக்கு சப்ளை செய்த விவசாயிகள் நலன் கருதி  2025 - 2026 ஆம் ஆண்டு கரும்பு அரவைப் பருவத்திற்கு   விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த கரும்பு  டன் ஒன்றுக்கு ஊக்கத் தொகையுடன் ரூ.4,000/ ம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிட்டது.
தற்போது  அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் அடுத்த நவம்பர் மாதம் 8 ந் தேதி அன்று தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு கரும்பு சர்க்கரை ஆலைக்கு சப்ளை செய்த விவசாயிகள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல மாதங்களாக நிலுவையில் உள்ள கரும்புக்கு  உண்டான ஊக்கத் தொகை டன் ஒன்றுக்கு ரூ.700/ நிலுவையை தவெக அரசு  உடனடியாக விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் வாயிலாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வர் மாண்பமை பொருந்திய ஜோசப் விஜய் அவர்களுக்கு வலியுறுத்தி உள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: