நாமக்கல்,
S.K. சுரேஷ் பாபு.
தமிழக விவசாயிகளுக்கு எதிராக மேகதாட்டில் அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் விவகாரம்.
அணை கட்டுவதை தடுத்து நிறுத்தி துவம்சம் செய்து ரத்தம் சிந்தவும் தமிழக விவசாயிகள் தயங்கமாட்டார்கள். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஆர் வேலுச்சாமி ஆவேச எச்சரிக்கை.
தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளின் ஜீவாதாரமான மேட்டூர் அணைக்கான நீர்வரத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்தும் வகையில் கர்நாடகா அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் பல்வேறு போராட்டங்களை அறிவித்து அதனை தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக கடைசியாக அத்து மீறி காவிரி பங்கீட்டு நீரை கர்நாடகா அணைகளில் இருந்து தமிழக விவசாயிகள் திறப்பதற்காக, நடைபெற்ற போராட்டத்தின் போது ஒரு புறத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையிலான தமிழக விவசாயிகளும், மற்றொருபுரத்தில் வட்டாள் நாகராஜ் தலைமையிலான கர்நாடக விவசாயிகளும் போராட்டம் மேற்கொண்டது தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் மிகப்பெரிய ஒரு பதற்றத்தை உருவாக்கியது என்றே கூறலாம். இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்ட வரும் மார்ச் மாதத்திற்குள் அடிக்கல் நாட்டப்படும் என கர்நாடக அமைச்சர் செல்வராயசாமி உறுதி தெரிவித்துள்ளதோடு, அணை கட்டுவதற்கான அனைத்து தொழில்நுட்ப பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளது தமிழக விவசாயிகளிடையே மிகப் பெரிய ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது மட்டும் நிதர்சனம். இதனிடையே மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை தற்போது வரை மதிக்காமலும், தமிழகத்திற்கான காவிரி பங்கீட்டு நீரை முறைப்படி வழங்க காவிரி ஒழுங்காற்று குழு ஆணையம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமலும் செயல்பட்டு வரும் கர்நாடக அரசின் இந்த தமிழக விவசாயிகளின் விரோத போக்கை கண்டித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர்R. வேலுச்சாமி தெரிவித்துள்ள ஆவேச எச்சரிக்கை அறிக்கையில்,
கர்நாடகா அரசு தமிழக விவசாயிகளுக்கு எதிராக மேகதாட்டில் அணை கட்டினால் அதனை துவம்சம் செய்ய தமிழக விவசாயிகளை அணி திரட்டி படையெடுத்து மேகதாட்டில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம் என்றும் தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிராக, மீறி அணை கட்டினால் தடுப்பதற்காக போராட்ட வடிவில் ரத்தம் சிந்தவும் தமிழக விவசாயிகள் தயங்கமாட்டார்கள் என கர்நாடக அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் R.வேலுச்சாமி மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுவதாக ஆவேசத்துடன் அறிவித்துள்ளார்.



0 coment rios: