புதன், 21 அக்டோபர், 2026

விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டத்தின் எதிரொலி. மூன்று புதிய வேளாண் திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற்றது என்பது வரலாறு. விவசாய கடன் முழுமையான தள்ளுபடி தொடர்பாக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் தவெக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை மேற்கொண்டு பணிய வைப்போம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி சூசக எச்சரிக்கை

நாமக்கல்,
S.K. சுரேஷ் பாபு.

விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டத்தின் எதிரொலி. மூன்று புதிய வேளாண் திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற்றது என்பது வரலாறு. விவசாய கடன் முழுமையான தள்ளுபடி தொடர்பாக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் தவெக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை மேற்கொண்டு பணிய வைப்போம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி சூசக  எச்சரிக்கை

இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். மத்திய அரசை ஒப்பிட்டு தமிழக த.வெ.க அரசுக்கு எதிராக சூசகமான முறையில்,  எச்சரிக்கை ஒன்றினை வெளிப்படுத்தி உள்ளார். அதில், 
தவெக  கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதியில், தமிழக விவசாயிகளின் பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் பரப்புரையில் தெள்ளத் தெளிவாக மேடையில் பேசிவிட்டு, தமிழகத்தில் தவெக கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பிற்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிப்படி பயிர் கடன் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றி விட்டது. தேர்தல் வாக்குறுதியை முறையாக நிறைவேற்றாததை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள விவசாய சங்கங்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றன. தமிழக அரசின் கவனத்திற்கு இச்செய்தியை கொண்டு செல்ல தினந்தோறும் போராட்டம் தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது.
நாட்டின் முதுகெலும்பாக உள்ள, மிக முக்கியமான தொழில் விவசாயத் தொழில், அப்படிப்பட்ட முதல் முக்கிய தொழிலை மேற்கொண்டுள்ள   விவசாயிகளுக்கு
தவெக அரசு  தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதால், தமிழக விவசாயிகள் ரோட்டில் இறங்கி போராடுவது தவெக அரசு தமிழகத்தில் ஆட்சி செய்வதற்கு அழகல்ல. தவெக அரசின் நிர்வாகம் தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய வெறுப்பை  ஏற்படுத்தி உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் மத்திய  பாஜக அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு எதிராக 3 புதிய வேளாண் திருத்த சட்டம் கொண்டு வந்து விவசாயிகளை வஞ்சிக்க முற்பட்டது புதிய வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் மிகப்பெரிய அளவில் ஒன்று திரண்டு ஒட்டு மொத்த குரலாக ஒலித்துக் கொண்டு தொடர் போராட்டத்தில் பங்கேற்றனர். 
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் உச்ச கட்டம் செல்வதை அறிந்த மத்திய பாஜக அரசு மூன்று புதிய வேளாண் திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற்றது. விவசாயிகள் மிகப்பெரிய அளவில் ஒன்று திரண்டு நடத்திய போராட்டத்தின் விளைவு தான் மத்திய பாஜக அரசே பணிந்தது என்ற வரலாறு உள்ளதை நினைவு படுத்திய தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி, 
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் தவெக அரசு நினைவில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு மட்டுமல்லாமல், தவெக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி உடனடியாக பயிர் கடன் தள்ளுபடி செய்யாமல்  காலதாமதம் செய்தால் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மிகப்பெரிய அளவில் ஒன்று திரண்டு  தவெக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள்  நடத்தி தவெக அரசை பணிய வைப்போம் என்பதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் சூசகமான முறையில் எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளார்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: