ஞாயிறு, 1 நவம்பர், 2026

தெய்வ வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் பம்பை இசையை, டெடி பேர் அணிவித்து இழிவுபடுத்திய செயலுக்குக் கண்டனம். சம்பந்தப்பட்டவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க சேலம் மாவட்ட கோவில் பூசாரிகள் கோரிக்கை.

சேலம், 
S.K.சுரேஷ்பாபு.

தெய்வ வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் பம்பை இசையை, டெடி பேர் அணிவித்து இழிவுபடுத்திய செயலுக்குக் கண்டனம். சம்பந்தப்பட்டவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க சேலம் மாவட்ட கோவில் பூசாரிகள் கோரிக்கை. 

போட்டி மிகுந்த இந்த சமுதாயத்தில் தங்களது தொழில் துறையை மேம்படுத்த பல்வேறு புதிய யுக்திகளை கையாள்வது வழக்கம். அந்த வகையில் கோவில் விழாக்களில் முக்கிய அங்கமாக திகழ்ந்துவரும் பம்பை மேளம் தொழிலை மேம்படுத்தும் விதமாக குழந்தைகளுக்கு பிடித்தமான டெடி பேர் உடை அணிந்து பம்பை இசை கலைஞர் இசைப்பது போன்ற ஒரு சம்பவம் சேலம் மாவட்டத்தில் அரங்கேரி வைரல் ஆகி வருகிறது. 
இது காலம் காலமாக ஆன்மீகப் பணியில் ஈடுபட்டிருக்கும் கோவில் பூசாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல் பம்பை தொழிலை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என்று கண்டன குரலும் எழுந்து வருகிறது. இது குறித்து சேலம் மாவட்ட கோவில் பூசாரிகள் சார்பாக சேலம் கிச்சி பாளையத்தை சேர்ந்த ஸ்ரீ அங்கு அங்காளம்மன் திருக்கோவில் நிர்வாகி பன்னீர்செல்வம் நம்மிடையே கூறுகையில், 
நாங்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோயில் பூசாரிகள். தெய்வ வழிபாட்டிலும் அம்மன் கோவில் திருவிழாக்களிலும் பம்பை இசை மிகவும் புனிதமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தகைய தெய்வீக இசையை டெடி பேர் கழுத்தில் அணிவித்து இழிவுபடுத்தும் வகையில் சித்தரித்திருப்பது எங்களது ஆன்மீக உணர்வுகளையும், பாரம்பரிய வழிபாட்டு மரபுகளையும் புண்படுத்தியுள்ளது. எனவே, இச்செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். பம்பை இசை எங்கள் தெய்வீக வழிபாட்டு மரபு. எங்கள் பாரம்பரியத்தை இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். இப்படிக்கு, சேலம் மாவட்ட கோயில் பூசாரிகள் சார்பாக கூறினார் பன்னீர்செல்வம்.
அப்பொழுது தனது ஆதங்கத்தை கண்டனமாக பதிவிட்டு கொண்டிருக்கும்போது அருகில் இருந்த ஸ்ரீ அங்கு அங்காளம்மனின் விக்கிரகத்தின் தலையில் இருந்த பூ கீழே விழுந்து, அம்மனே இந்த சம்பவத்திற்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிப்பதாகவே அமைந்திருந்தது. 
இது குறித்து சேலம் இளம்பிள்ளையை சேர்ந்த ஸ்ரீ மகாகாளியம்மன் பம்பை குழு நிர்வாகி பாலாஜி என்பவரை அணுகி இதுகுறித்து கேட்டபோது அவர் என் தொழிலை மேம்படுத்த நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எங்கு வேண்டுமானாலும் பார்த்துக் கொள் என்ற மிரட்டும் தோணியில் பேசியதாக வேதனை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் இதுகுறித்து மூத்த பம்பை கலைஞர்களிடம் பேசியபோது இந்த செயலுக்கு பல்வேறு மூத்த கலைஞர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: