நாமக்கல்,
S.K. சுரேஷ்பாபு
மேகதாட்டில் கர்நாடகா அரசு அணைக்கட்டும் விவகாரம். தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்க தலைவர்களையும் அழைத்துச் சென்று பாரத பிரதமரை சந்தித்து தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து எடுத்துரைக்க வழிவகை செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வேண்டுகோள்.
இது சம்பந்தமாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர் வேலுச்சாமி வெளியிட்டுள்ள வேண்டுகோள் செய்தி குறிப்பில்,
கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டி, தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கம் செய்ய எடுக்கும் முயற்சியை முறியடிப்பதற்கு, மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அனைவரையும் புதுடெல்லி அழைத்து சென்று, தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிலை நாட்டுவதற்காக, மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து தமிழக விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்படைவது குறித்து அனைவரது சார்பிலும் எடுத்துரைத்து கர்நாடகா அரசு மேகதாட்டில் காவிரியின் குறுக்கே அனைக்கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு சார்பில் பாரத பிரதமர் அவர்களை சந்திப்பதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் வாயிலாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர் வேலுச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.



0 coment rios: