வியாழன், 8 ஆகஸ்ட், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (9ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (9ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (9ம் தேதி) வெள்ளிக்கிழமை எழுமாத்தூர் மற்றும் கெட்டிச்செவியூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் துணை மின் நிலையம்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகப்பட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, பூந்துறை, சேமூர் மற்றும் 88 வேலம்பாளையம்.

கோபி அருகே உள்ள கெட்டிச்செவியூர் துணை மின் நிலையம்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கெட்டிச்செவியூர், சுள்ளிக்கரடு, பூச்சநாயக்கன் பாளையம், தண்ணீர்பந்தல் பாளையம், லட்சுமிமாய்புதூர், வாக்கரை புதூர், நீலாம்பாளையம், செஞ்சிலாமாபாளையம், தோரணவாவி, நல்லக்காபாளையம், வடக்குபாளையம், ராசாகவுண்டன்பாளையம், செரைக்கோயில் மற்றும் பள்ளக்காடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வக் போர்டு சட்ட திருத்தம் சம்பந்தமாக மத்திய அரசு இன்று தாக்கல் செய்த மசோதா, மீண்டும் ஒரு ஷாக்கின் பாத் போராட்டம் இந்தியாவில் வெடிக்கும். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் காஜா மைதீன் எச்சரிக்கை.

வக் போர்டு சட்ட திருத்தம் சம்பந்தமாக மத்திய அரசு இன்று தாக்கல் செய்த மசோதா, மீண்டும் ஒரு ஷாக்கின் பாத் போராட்டம் இந்தியாவில் வெடிக்கும். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் காஜா மைதீன் எச்சரிக்கை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.


மத்திய அரசால் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்போர்ட் தொடர்பான சட்ட திருத்த மசோதா சிறுபான்மை மக்களை பதட்ட நிலையிலே வைத்திருக்கக்கூடிய ஒன்று. மத்திய அரசு தனது கொடூர போக்கை கைவிட வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர்காஜாமைதீன் எச்சரிக்கை.

மத்திய அரசின் இன்று தாக்கல் செய்துள்ள வக்பு வாரிய சொத்துக்கள் தொடர்பாக மசோதா குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் காஜா மைதீன் நம்மிடையே கூறுகையில், புதிதாக மத்திய அரசு இன்று அறிமுகப்படுத்திய திருத்த சட்டம் முற்றிலும் இந்தியா முழுக்க வாழக்கூடிய பலகோடி சிறுபான்மை மக்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது.  அதேபோல அரசமைப்புச் சட்டத்துக்கும் எதிராக உள்ளது. இந்தியாவில்  இந்திய ரயில்வேக்கு அடுத்தபடியாக பெரிய அளவுக்கு சொத்து வக்பு வாரியத்திற்கு இருக்கிறது என்ற  கணக்கு இருக்கின்றது. இந்தியா முழுக்க இருக்கக்கூடிய சிறுபான்மை மக்களின் சொத்துக்களை சூறையாடும் விதமாக ஒன்றிய அரசு இப்படி ஒரு மோசமான சட்டத்தை இன்றைக்கு நடைமுறைப்படுத்தியிருக்கு. அதுல இன்னும் குறிப்பிட்டு சொல்லனும்னா இந்தியாவுல சிறுபான்மையினரோ அல்லது ஒடுக்கப்பட்ட மக்களும் ஒரு அமைதியான மனநிலையிலோ சூழலையோ, வாழ்ந்திட கூடாதுங்கிறதுல ஒன்றிய அரசு ரொம்ப தெளிவா இருக்கு அதோட நீட்சியா இவங்க கிளப்பின ராமர் கோவில் பிரச்சனை பாபர் மசூதி பிரச்சனை எல்லாம் முடிஞ்சிருச்சு தேர்தல்ல அவங்க எதிர்பார்த்த வெற்றி கிடைக்கல ஆகையினால் திரும்ப சிறுபான்மை மக்களை ஒடுக்குவதன் மூலமாக பெரும்பான்மை மக்களை தன் வகைப்படுத்தி  அடுத்தடுத்து வரக்கூடிய தேர்தல்கள்ல இதையே வந்து மூலதனம் ஆக்கி வெற்றி பெற்றுள்ளாங்கிற ஒரு எண்ண ஓட்டத்தோட சிறுபான்மை மக்கள் நசுக்கக் கூடிய வகையில் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கு. 
அதிலே இன்னும் குறிப்பா சொல்லப்போனால் வக்பு வாரிய அந்த உறுப்பினர்கள்ல இஸ்லாம் சாராத மாற்று மதத்தை சேர்ந்தவர்களையும் அனுமதிக்கலாங்கிற இந்த போக்கு மிகவும் அபாயகரமானது ஏன்னு கேட்டா பெயர் தாங்கிய இஸ்லாமியர்கள் ஒரு சிலர் கேரளா ஆளுநர் முகமது ஆரிப் போன்ற பெயர்தாங்கி இஸ்லாமியர்களை கூட  ஆர்எஸ்எஸ் சிந்தனையை உடையவர்களை வைத்துவிட்டு ஒரு மாநில அரசியல் நடத்த கூடாத அளவுக்கு பண்ணக்கூடிய அந்த பிஜேபி நேரடியாக ஆர்எஸ்எஸ்ல இருக்கறவங்கள மாற்று மதத்தவர் என்ற பெயரில போலியா இந்த வகுப்பு வாரியத்தில் ஆர்எஸ்எஸ் சிறந்தவர்களை உறுப்பினராக்கி இஸ்லாமியர்களோட சொத்துக்களை சூறையாடுவதற்கான ஒரு சதி திட்டம் தான் இந்த புதிய சட்டம் இந்த சட்டத்தை இந்தியா முழுக்க இருக்கக்கூடிய சிறுபான்மை மக்களை ஒன்று திரட்டி கடுமையாக எதிர்க்க இருக்கின்றோம். அதோடு மட்டுமல்லாமல்  தமிழகம் தழுவிய  அளவுல மிகப்பெரிய போராட்டத்தை இஸ்லாமிய இயக்கங்களை அணி திரட்டி போராடுவோம் என்றும் கண்டிப்பாக சேலம் மாவட்டத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களை திரட்டி இதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்த இருக்கிறோம் என்றார்.
ஒன்றிய அரசு உடனடியாக இந்த சட்டத்தை திரும்ப பெறணும் அப்படி திரும்ப பெறாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் சாகின்பாக் போராட்டம் போன்று மீண்டும் ஒரு ஷாகின்பாக் போராட்டமாக இந்தியா முழுக்க வெடிக்கும் என்ற அந்த நிலைதான் இன்னைக்கு இஸ்லாமிய மக்கள்ட்ட இருக்கு தொடர்ந்து சிறுபான்மை மக்களை பதட்ட நிலையிலே வைத்திருக்கக்கூடிய இந்த ஒன்றிய  அரசு தனது கொடூர போக்கை மாத்திக்கணும்னு கேட்டுக்குறேன் என்றும் சேலம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் காஜா மைதீன் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதன், 7 ஆகஸ்ட், 2024

அந்தியூர் குருநாதசுவாமி கோயில் கால்நடைச் சந்தை சிறப்பு புகைப்படத் தொகுப்பு

அந்தியூர் குருநாதசுவாமி கோயில் கால்நடைச் சந்தை சிறப்பு புகைப்படத் தொகுப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருந் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவின் சிறப்பு என்னவென்றால் தென்னிந்திய அளவில் புகழ் பெற்ற கால்நடைச் சந்தை நடைபெறுவது தான்.

இந்நிலையில், நடப்பாண்டு ஆடிப்பெருந் தேர்த்திருவிழா, புகழ்பெற்ற கால்நடைச் சந்தை இன்று (7ம் தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, வரும் 10ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. 

இன்று தொடங்கிய கால்நடைச் சந்தைக்கு சேலம், நாமக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் குதிரைகள், மாடுகளை மற்றும் ஆடுகளை விற்பனைக்காகவும், கண்காட்சிக்காகவும் கொண்டு வந்துள்ளனர்.

மேலும், கால்நடைகளுக்கென பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்களும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. குதிரைகளையும், மாடுகளையும் வாங்கிச் செல்வதற்கும் தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

குருநாதசுவாமி கோயில் கால்நடைச் சந்தை தொடங்கிய நிலையில், சிறப்பு புகைப்படத் தொகுப்பினை இங்கு காண்போம்.

ஈரோட்டில் மாவட்ட அளவிலான கைத்தறி கண்காட்சி விற்பனையை துவக்கி வைத்த ஆட்சியர்

ஈரோட்டில் மாவட்ட அளவிலான கைத்தறி கண்காட்சி விற்பனையை துவக்கி வைத்த ஆட்சியர்

முதலாவது தேசிய கைத்தறி தினம் தமிழ்நாட்டில் 2015ம் ஆண்டு சென்னையில் கொண்டாடப்பட்டது. தற்பொழுது இன்று (7ம் தேதி) பத்தாவது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 190 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், 56 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும் என 246 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்களில் 59,733 கைத்தறி நெசவாளர்களும் மற்றும் 7,550 விசைத்தறி நெசவாளர்களும் உள்ளனர்.

கைத்தறி கண்காட்சியில் ஈரோடு மாவட்டத்திலுள்ள 27 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், கோ-ஆப்டெக்ஸ் மற்றும் கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் கலந்து கொண்டுள்ளது. மேலும், இக்கண்காட்சியில், பெட்ஷீட்கள், துண்டுகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள், ஜமுக்காளம், சேலைகள், மேட்கள் போன்ற இரகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், அனைத்து கைத்தறி ஜவுளி ரகங்களுக்கும் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்கண்காட்சியானது, இன்று (7ம் தேதி) மற்றும் நாளை (8ம் தேதி) காலை 10 முதல் மாலை 6 வரை நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் கைத்தறி பொருட்களை அதிக அளவில் வாங்கி கைத்தறி நெசவாளர்கள் வாழ்வு மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, கண்காட்சியில் 8 மூத்த கைத்தறி நெசவாளர்களுக்கு சால்வை அணிவித்து, கேடயங்களை வழங்கி, கௌரவித்தார். மேலும், 5 நெசவாளர்களுக்கு நெசவாளர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய வீடு கட்டுவதற்கான பணி ஆணை, 5 நெசவாளர்களுக்கு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 25 ஆயிரத்து 222 மதிப்பீட்டில் உதவித்தொகை, இ- முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 5 நெசவாளர்களுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, கைத்தறி குழும செயல் திட்டத்தின் கீழ் 5 நெசவாளர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் தறிக்கூடம் தொகை, கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் சென்னிமலை தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் 5 உறுப்பினர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் அச்சு ஒடி நாடா தொகை, 10 உறுப்பினர்களுக்கு முதியோர் மற்றும் குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உதவித்தொகைகள் என மொத்தம் ரூ.37.95 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி பாயிண்ட்-ல் புகைப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, உதவி இயக்குநர் (கைத்தறி) தமிழ்செல்வன், கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) மோகன்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

பெருந்துறை பகுதியில் நாளை (8ம் தேதி) மின்தடை அறிவிப்பு

பெருந்துறை பகுதியில் நாளை (8ம் தேதி) மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திங்களூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (8ம் தேதி) வியாழக்கிழமை நடக்கிறது. இதனால் கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்களூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டண் பாளையம், சுங்ககாரன்பாளையம், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், சீனாபுரம், மேட்டூர், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன் பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், சி.எம்.பாளையம், எல்லப்பாளையம், கோமையன் வலக, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் வெள்ளத்தில் குருநாதசுவாமி கோயில் மகமேரு தேர்கள்: அந்தியூரில் கோலாகலம்

பக்தர்கள் வெள்ளத்தில் குருநாதசுவாமி கோயில் மகமேரு தேர்கள்: அந்தியூரில் கோலாகலம்

ஈரோடு மாவட்டம் அந்தியூரின் முக்கிய திருவிழாவான ஆடி நோம்பி எனப்படும் பிரசித்தி பெற்ற புதுப்பாளையம் குருநாதசுவாமி கோயில் ஆடித்தேர் திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, 24ம் தேதி கொடியேற்றமும், 31ம் தேதி முதல் வன பூஜையும் நடந்தது.
இதனையடுத்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பெருந் தேர்த்திருவிழா இன்று (7ம் தேதி) காலை நடந்தது. புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து, சப்பார பல்லக்கில் காமாட்சியம்மன் முன்னே செல்ல, ஒன்றன்பின் ஒன்றாக, சுமார் 58 அடி உயர மகமேரு தேரில் பெருமாள் சுவாமி மற்றும் 60 அடி உயரமுள்ள தேரில் குருநாதசுவாமி பின்னே சென்றன.

தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்து சென்றனர். கோயில் மடப்பள்ளியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனக்கோயிலுக்கு, தேர்கள் பக்தர்கள் கூட்டத்தில் மிதந்தபடி சென்றது. அங்கு, சுவாமிகளுக்கு, சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் வனக்கோயில் வளாகத்திலேயே குடும்பம் குடும்பமாக பொங்கல் வைத்து கொண்டாடினர்.

மீண்டும் நாளை (8ம் தேதி) அதிகாலை அங்கிருந்து மூன்று சுவாமிகளும் மடப்பள்ளிக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும், இந்தத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தென்னிந்திய அளவில் புகழ் பெற்ற குதிரை மற்றும் மாட்டு சந்தை தொடங்கியது. இதை ஆயிரக்கணக்கான கண்டுகளித்து வருகின்றனர்.

தொடர்ந்து, 10ம் தேதி வரை திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

ஈரோட்டில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்  போக்சோ சட்டத்தில் கைது

ஈரோட்டில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த அசோகன் (49). இவரால் அந்தப் பகுதியில் செல்லப்பிராணிகளை விற்கும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு ஏராளமானோர் வந்து செல்வார்கள். இவரது கடையில் உள்ள மீன், பறவை, நாய் போன்றவற்றை பார்ப்பதற்காக 11 வயது சிறுமி அடிக்கடி வந்து செல்வார். அப்போது அந்த சிறுமியிடம் கடையில் உரிமையாளர் அசோகன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். 
தொடர்ந்து பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வந்ததால் அந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து அவரது பெற்றோர் இது குறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு அசோகன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து அசோகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.